“ரோஜாவின் பெயர்” நாவல் மொழிபெயர்ப்பு பல உரைநடை வகைமைகளை தன்னுள் வைத்திருக்கிறது என்பதை ஏற்கனவே கவனப்படுத்தி எழுதியிருக்கிறேன. அவற்றில் வாக்கிய சிதறல்களும் (fragments), சிதைவுகளும், திருச்சபையின் தூய உயர் லத்தீன் பயன்பாடும் கூட அடக்கம். நிற்க.
மொழியின் கருத்தியல் வன்முறை (ideological violence) உரைநடையை பத்திரிக்கைத் தமிழாக தரப்படுத்துவதிலும் நிலைநிறுத்துவதிலும், அதைத் தவிர இதர உரைநடை வடிவங்களை மறுதளிப்பதிலும் இருக்கிறது. பெயரிடலும் (Naming), கதைசொல்லலும் (Narrativizing) இன்னொரு வகையான கருத்தியல் வன்முறைகள். இவற்றை அம்பலப்படுத்துவது சமகால இலக்கியத்தின் முக்கிய நோக்கம்.
இப்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் “ஸில்வியா எனும் புனைபெயருக்கான அஞ்சலிக்குறிப்புகள்” நாவலில் பல்வேறு உரைநடை வகைமைகள், கதை சொல்லல் முறைகள், விதவிதமான பெயரிடல்கள் ஆகியவற்றைச் சேர்த்திருக்கிறேன். சமீபத்தில் தமிழ்வெளி இலக்கிய இதழில் வெளிவந்த சிறுகதை “காகங்கள் கரையும் முது மதியம்”, என்னுடைய “மைத்ரேயி மற்றும் பல கதைகள்” தொகுப்பிலுள்ள “சில்வியா எழுதாத கதை “மு என்ற இராமதாசு” , “மைத்ரேயி” ஆகிய சிறுகதைகளையும் நாவலில் சேர்த்திருக்கிறேன்.
இந்த உரைநடை வகைமைகள், வாக்கியப் புதுமைகள், பெயரிடல்கள், கதை சொல்லல்கள் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்கள் எனது நாவலுக்கான முன்னோட்டமாக இந்த மூன்று சிறுகதைகளையும் வாசித்துப் பார்க்கலாம்.
சில்வியா எழுதாத கதை “மு என்ற இராமதாசு”
https://mdmuthukumaraswamy.blogspot.com/2012/12/blog-post_26.html
மைத்ரேயி
https://mdmuthukumaraswamy.blogspot.com/2012/12/blog-post_18.html
காகங்கள் கரையும் முது மதியம்
https://mdmuthukumaraswamy.blogspot.com/2025/07/blog-post.html
No comments:
Post a Comment