1988 ஆம் ஆண்டு என்னுடைய சிறுகதைகள் ஏழு 'பிரம்மனைத் தேடி' என்ற சிறு தொகுப்பாக பாளையங்கோட்டையிலிருக்கும் 'இலக்கியத் தேடல்' என்ற பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டது. இந்தக் கதைகளில் ஆறு 'ராகம்' இலக்கிய இதழில் 1984 -1985 பிரசுரமானவை. ஒரு கதை 'இனி' இதழில் 1987இல் பிரசுரமானது. ஸில்வியா என்ற புனைபெயரில் நான் அப்போது எழுதிய கதைகளோடு எந்த உறவும் இப்போது எனக்கு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பதின் பருவத்தின் பழைய காதலியை திடீரென்று சந்திக்க நேரிட்டது போல இருக்கிறது இந்தக் கதைகளை புரட்டிப் பார்க்கும்போது. 'குங்குமம்' இதழின் பொறுப்பாசிரியர், நண்பர் என்.கதிர்வேலன் இந்த சிறு தொகுப்பினைத் தேடிக் கண்டுபிடித்து என்னிடம் கொடுத்தார். அதை அப்படியே ஸ்கேன் செய்து பதிவேற்றியிருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் தரவிறக்கிக் கொள்ளலாம். நண்பர் கதிருக்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். 'புதிய பார்வை' இதழில் வெளியான இன்னும் சில கதைகளையும் கதிர் தேடிக்கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார். அவருக்கு நான் நன்றி தெரிவிக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் மேலும் ஏற்படட்டும். நான் எழுதி சேமிக்காமல் விட்டு விட்ட எல்லா கதைகளும் என்னிடம் சிறுகச் சிறுக திரும்ப வந்து சேர்ந்துவிடட்டும். நான் எந்தப் பாதைகளிலெல்லாம் பயணம் செய்திருக்கிறேன் என்று நானும் தெரிந்து கொள்கிறேன்.
சிறுகதைத் தொகுப்பினை தரவிறக்குவதற்கான சுட்டி:
https://docs.google.com/file/d/0BzHCwqQ3UxT7RlZMR1gtSTE4UDQ/edit?usp=sharing
இப்படிப்பட்ட அறிமுகக்குறிப்புகள் இல்லாமல் இந்த தளத்தில் நான் பிரசுரம் செய்யும் கதைகள் புதியவை என்று அறிக.
சிறுகதைத் தொகுப்பினை தரவிறக்குவதற்கான சுட்டி:
https://docs.google.com/file/d/0BzHCwqQ3UxT7RlZMR1gtSTE4UDQ/edit?usp=sharing
இப்படிப்பட்ட அறிமுகக்குறிப்புகள் இல்லாமல் இந்த தளத்தில் நான் பிரசுரம் செய்யும் கதைகள் புதியவை என்று அறிக.
No comments:
Post a Comment