"உலகப் புகழ் பெற்ற இத்தாலிய நாவலாசிரியரும் குறியியியல் (semiotics) அறிஞருமான உம்பர்டோ ஈக்கோ 2016 பிப்ரவரி 19 அன்று மிலான் நகரில் மரணமடைந்தார். 1980களின் மத்தியிலிருந்து தமிழின் இலக்கியச் சிறுபத்திரிகைகளிலும், கல்விப் புலத்திலும் அமைப்பியல், குறியியல் ஆகிய சிந்தனைத் துறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு அதிகமும் விவாதிக்கப்பட்டு சிந்தனைத் துறை மாற்றங்களை விளைவித்துவந்தன. அதன் ஒரு பகுதியாக உம்பர்டோ ஈக்கோவின் சிந்தனைகளும் படைப்புலகமும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஈக்கோவின் புகழ்பெற்ற ‘ரோஜாவின் பெயர்’ (Name of the rose) நாவலைப் பற்றிய மிக விரிவான அறிமுகத்தைத் தமிழில் பிரேம்-ரமேஷ் 1990களின் மத்தியில் எழுதியிருக்கிறார்கள்."
மேலும் படிக்க
http://tamil.thehindu.com/general/literature/அஞ்சலி-உம்பர்டோ-ஈக்கோ-ரோஜாவின்-பெயர்/article8264212.ece?ref=sliderNews
No comments:
Post a Comment