Wednesday, December 12, 2012

அரவிந்தன் நீலகண்டனுக்கு டாப் 10 கேள்விகள்


தமிழ் ஹிந்து தளத்தில் என்னுடைய “தீண்டாமையைப் பேசுகிறதா இந்து மூல நூல்கள்” கட்டுரைக்கு தன்னுடைய அடுத்த பாக எதிர்வினையை எழுதிவிட்டாரா அரவிந்தன் நீலகண்டன் என்று படிப்பதற்காக போய்ப்பார்த்தேன். போதிசத்துவரின் இந்துத்துவம் என்று புதுக்கட்டுரைத்தொடரை அவர் தொடங்கியிருக்கிறார். அதைப் படிக்கப் போக அவர் எழுதியிருப்பது குறித்து சில கேள்விகளைக் கேட்கத் தோன்றியது.

அரவிந்தன் நீலகண்டன் எழுதுகிறார்:
  1. 1948 இல் மகாத்மா காந்தி கொலையில் சாவர்க்கர் கைது செய்யப்பட்ட போது, அம்பேத்கர் அவருக்கு உதவினார். காந்தி கொலை குறித்த மிகவும் ஆதார பூர்வமான விரிவான வரலாற்று நூல் ‘காந்தியை கொன்றவர்கள்’ (‘The Men Who Killed Gandhi’, 1978) என்பதாகும். இதை எழுதிய மனோகர் மல்கோன்கர் 2008 இல் வெளியான இந்நூலின் பதிப்புக்கான முகவுரையில் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினார். 1978 பதிப்பில் அரசாங்கம் சில தரவுகளை வெளியிடக் கூடாது என நிர்ப்பந்தித்து அத்தரவுகள் வெளிவராமல் செய்தது. அவற்றுள் ஒன்று ’திரு.சாவர்க்கரின் வழக்கறிஞரான போபட்கருக்கு டாக்டர்.பீமராவ் அம்பேத்கர் அளித்த ரகசிய உறுதி: சாவர்க்கர் இந்த கொலை வழக்கில் பலவீனமான ஆதாரத்தின் பெயரிலேயே சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பதுதான்.”

மகாத்மா காந்தின் படுகொலை வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் சாவர்க்கார் விடுவிக்கப்பட்டார் என்பது வரலாறு. போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதை ஒரு வேளை அம்பேத்கர் போபட்கருக்கு தெரிவித்திருந்தது உண்மை என்று வைத்துக்கொண்டாலுமே நீதிமன்றமே முடிவு செய்த ஒரு தகவலைத்தானே அவர் தெரிவித்திருக்கிறார். இது எப்படி அம்பேத்கர் சாவர்க்கருக்கு உதவி செய்ததாகும்?  மகாத்மா காந்தி கொலைவழக்குக்குப் பின்னுள்ள சதியை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் ஜீவன்லால் கபூர் கமிஷன் அறிக்கை சாவர்க்கரின் மெய்காப்பாளர் அப்பா ராமச்சந்திர காசரும், காரியதரிசி கஜானன் விஷ்ணு டாம்லேயும் விசாரணை நீதிமன்றத்தால் விசாரிக்கப்படவில்லை அவர்கள் விசாரிக்கப்பட்டிருந்தால் ஜனவரி 14, 17 1948 ஆகிய தேதிகளில் கோட்சேயும் ஆப்தேயும் சாவர்க்கரை சந்தித்ததைச் சொல்லியிருப்பார்கள்; சாவர்க்கருக்கும் அவருடைய குழுவினருக்கும் மகாத்மா காந்தி கொலைக்குப் பின்னால் இருந்த சதியில் பங்கில்லை என மறுத்திருக்கமுடியாது என்று சொல்கிறது. பார்க்க நீதியரசர் ஜீவன் லால் கபூர் கமிஷன் அறிக்கை: http://www.sacw.net/article2611.html 
  1. பாபா சாகேப் அம்பேத்கர் சாவர்க்காருக்கு எழுதிய கடிதத்திலிருந்து அரவிந்தன் நீலகண்டன் பின்வருமாறு மேற்கோள் காட்டுகிறார்: “ ஆனால் நான் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீங்கள் செய்து வரும் பணிக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் ஹிந்து சமுதாயத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக வேண்டுமென்றால் தீண்டாமையை அகற்றினால் மட்டும் போதாது; அதற்கு சாதுர்வர்ண கோட்பாடும் அழிய வேண்டும். இந்த உண்மையை புரிந்து கொண்டுள்ள வெகுசில தலைவர்களில் நீங்களும் ஒருவர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்”.

சாதுர் வர்ணத்தை அழிப்பதற்கு சாவர்க்கரின் வழி செயல்படும் அரவிந்தன் நீலகண்டனோ அல்லது இந்துத்துவ அமைப்புகளோ கருத்தியல்ரீதியாக என்ன பங்களிப்புகளைச் செய்திருக்கிறார்கள்?

3. அரவிந்தன் நீலகண்டன் எழுதுகிறார்:  “சாவர்க்கரை பொறுத்த வரையில் சாஸ்திர அடிப்படையிலான சாதி அமைப்பு ஒரு மனநோய். இந்த சமூக மனநோய்க்கான மருந்து இந்த சாஸ்திரங்களை நம்பாமல் நிராகரிப்பதுதான்.இந்து சனாதன ஆச்சாரவாதிகள் வர்ணாசிரமத்தை விடாமல் உடும்பு பிடியாக பிடித்துக் கொண்டிருந்த போது வீர சாவர்க்கர் வார்த்தைகள் நீர்க்காமல் கூறினார்:
 ”சாதி பிரிவுகளும் சாதுர் வர்ண அமைப்பும் வெறும் பழக்கங்களே. அவற்றுக்கும் சனாதன தர்மத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை இன்று சாதி அமைப்பு என்கிற பெயரில் நிலவும் திரிபுகள் அழிந்தால் அதனால் சனாதன தர்மம் ஒன்றும் செத்துவிடாது” “
முதல் வரி சாஸ்திர அமைப்பிலான சாதிஅமைப்பு ஒரு மனநோய் என்று சொல்கிறது. சரி. சாஸ்திரங்களை நம்பாமல் நிராகரிக்கவேண்டும் என்கிறது அடுத்த வரி. சரி. சாஸ்த்திரங்களை நிராகரித்தபின் சனாதன தர்மத்தை எப்படி பேணுவதாம்? சாஸ்திரங்களற்ற இந்து மத சனாதன தர்மம் எது? சாஸ்திர அமைப்பிலான சாதி அமைப்பு என்று நீங்கள்தானே ஐயா எழுதுகிறீர்கள் முதல் வரியில்? 


அம்பேத்கர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்:

That for a Hindu, Dharma means commands and prohibitions, is clear from the way the word Dharma is used in the Vedas and the Smritis and understood by the commentators. The word Dharma as used in the Vedas in most cases means religious ordinances or rites. Even Jaimini in his Purva-Mimamsa defines Dharma as "a desirable goal or result that is indicated by injunctive (Vedic) passages."


4. அரவிந்தன் நீலகண்டன் எழுதுகிறார்: “ டாக்டர் அம்பேத்கர் இந்துக்கள் குறித்த சாவர்க்கரின் வரையறையை கவனமாக ஆராய்கிறார்:

திரு.சாவர்க்கரின் பார்வையில் இந்து என்பவன் “…பாரதபூமியை சொந்தமாக கருதுபவன், சிந்து முதல் சமுத்திரம் வரையான பாரதத்தை தந்தையர் தேசமாகவும் புண்ணிய பூமியாகவும் கருதுபவன். அவன் தோன்றிய தேசமாகவும் அவனது சமயங்களின் தொட்டிலாகவும் கருதுபவன். எனவே வேதமதம், சனாதனம், ஜைனம், பௌத்தம், லிங்காயுத்துகள், சீக்கியர், ஆரிய சமாஜிகள், பிரம்ம சமாஜிகள், தேவசமாஜிகள், பிரார்த்தனா சமாஜிகள்  மற்றும் இந்திய மண்ணில் தோன்றிய சமயத்தவர் அனைவரும் இந்துக்கள்; இந்து சமுதாய  உறுப்பினர்.”…
இவ்வரையறையில் இந்து என்கிற பதம் மிகவும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் வரையறுக்கப்பட்டுள்ளது. இது திரு.சாவர்க்கர் தாம் கொண்டுள்ள இரு நோக்கங்களை பூர்த்தி செய்யும் விதத்தில் உருவாக்கப் பட்டுள்ளது. முதலில் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிகள் மற்றும் யூதர்களை இந்து எனும் வரையறையிலிருந்து நீக்குகிறது. இது இந்தியாவை புனிதபூமியாக கருதுவோர் என்பதன் மூலம் செய்யப்படுகிறது. இரண்டாவதாக வேதங்களின் புனிதத்தன்மையை இந்து என்பதற்கான வரையறையாக கருத வேண்டியதில்லை என கூறுவதன் மூலம் பௌத்தர்கள் சமணர்கள் மற்றும் சீக்கியர் ஆகியோரை இந்து எனும் வரையறைக்குள் கொண்டு வருகிறது.  இதன் மூலம் ஆதிவாசி மலைவாழ் மக்களும் இந்துக்கள் ஆகின்றனர். ஏனெனில் அவர்கள் எந்த மதநம்பிக்கை கொண்டவராக இருந்தாலும் பாரதம் அவர்களுக்கும் தந்தைபூமியும் புனித பூமியும் ஆகும்”
இந்து என்பது ஆயிரக்கணக்கான பிரிவினைகளும் உட்பிரிவினைகளும் கொண்ட ஒரு மதத்தின் பெயர்தானே அது எப்படி ஒரு நிலப்பரப்பை தேசமாகக்கொள்பவனின் பெயராகும்? தேசம் என்பது ஒரு நிலப்பகுதியின் நிர்வாக அரசியல் அமைப்பு சட்டங்களினால் உருவாக்கப்படும் இறையாண்மை உடையது. அது எப்படி மதத்தின் பெயராகும்? கிறித்தவர்கள், முஸ்லீம்கள், பார்ஸிகள் இந்தியா என்று அறியப்பட்ட நிலப்பரப்பை ஏன் தங்களின் புனித பூமியாகக் கருதக்கூடாது? பௌத்தர்கள், சமணர்கள் சீக்கியர்கள், பழங்குடிகளை சாவர்க்காரிய இந்துத்துவர்கள் இந்துக்கள் என்று அழைக்கலாம் ஆனால் அவர்கள் அதை ஒத்துக்கொள்கிறார்களா என்ன? வாழ்வியல் ஒற்றுமைகளை கணக்கில் கொண்டு சிவில் சட்டங்களை உருவாக்கியிருப்பது அவர்கள் அனைவரையும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களாக்கிவிடாது. தன் மதம் என்ன என்று பெயரிட்டோ பெயரிடாமலோ சொல்லும் உரிமை அவரவர்க்குத்தான் உண்டு. நீங்கள் பௌத்தரை இந்து என்று அழைப்பதால் அவர் இந்து ஆகிவிடமாட்டார் அதே போல உங்கள் வரையறைக்குள் வராதவர் திடீரென இந்தியனாக இல்லாமலும் போய்விடமாட்டார். 

  1. சாதிய ஒழிப்பு (The Annihilation of caste) என்ற அம்பேத்கரின் புகழ்பெற்ற உரையை மேற்கோள் காட்டும் நீலகண்டன் அரவிந்தன் அவ்வுரையில் ஹிந்துக்களையும் முஸ்லீம்களையும் கிறித்தவர்களையும் ஒப்பிட்டு என்னவெல்லாம் சொல்கிறார் என்று தருவதில்லை.
அம்பேத்கரின் உரையிலிருந்து எடுக்கப்பட்ட பின் வரும் பத்திகளைப் படித்துப் பாருங்கள்:
 கிறித்தவர்கள், முஸ்லீம்கள், இந்துக்கள் ஒப்பீடு
“The Hindus criticise the Mohammedans for having spread their religion by the use of the sword. They also ridicule Christianity on the score of the Inquisition. But really speaking, who is better and more worthy of our respect—the Mohammedans and Christians who attempted to thrust down the throats of unwilling persons what they regarded as necessary for their salvation, or the Hindu who would not spread the light, who would endeavour to keep others in darkness, who would not consent to share his intellectual and social inheritance with those who are ready and willing to make it a part of their own make-up? I have no hesitation in saying that if the Mohammedan has been cruel, the Hindu has been mean; and meanness is worse than cruelty.”
7.கிறித்தவ மிஷெனரிகள் செய்வதை/செய்திருப்பதை இந்துக்கள் செய்வார்களா?

“The Hindus will probably seek to account for this savage state of the aborigines by attributing to them congenital stupidity. They will probably not admit that the aborigines have remained savages because they had made no effort to civilize them, to give them medical aid, to reform them, to make them good citizens. But supposing a Hindu wished to do what the Christian missionary is doing for these aborigines, could he have done it? I submit not. Civilizing the aborigines means adopting them as your own, living in their midst, and cultivating fellow-feeling—in short, loving them. How is it possible for a Hindu to do this? His whole life is one anxious effort to preserve his caste. Caste is his precious possession which he must save at any cost. He cannot consent to lose it by establishing contact with the aborigines, the remnants of the hateful Anaryas of the Vedic days.”



8. இந்து சாதி அமைப்பிற்குள்ளாக நற்குண அறங்கள் இல்லை
“The effect of caste on the ethics of the Hindus is simply deplorable. Caste has killed public spirit. Caste has destroyed the sense of public charity. Caste has made public opinion impossible. A Hindu's public is his caste. His responsibility is only to his caste. His loyalty is restricted only to his caste. Virtue has become caste-ridden, and morality has become caste-bound. There is no sympathy for the deserving. There is no appreciation of the meritorious. There is no charity to the needy. Suffering as such calls for no response. There is charity, but it begins with the caste and ends with the caste. There is sympathy, but not for men of other castes.”
9. சாஸ்திரங்களைத் தூக்கி எறியும் தைரியமிருக்கிறதா உங்களுக்கு? சாதிக்கு அப்பாற்பட்டு இந்து மதம் என்று என்ன இருக்கிறது?
It is no use seeking refuge in quibbles. It is no use telling people that the Shastras do not say what they are believed to say, if they are grammatically read or logically interpreted. What matters is how the Shastras have been understood by the people. You must take the stand that Buddha took. You must take the stand which Guru Nanak took. You must not only discard the Shastras, you must deny their authority, as did Buddha and Nanak. You must have courage to tell the Hindus that what is wrong with them is their religion—the religion which has produced in them this notion of the sacredness of Caste. Will you show that courage?
முழுமையாக அம்பேத்காரின் உரையைப் படிக்க http://ccnmtl.columbia.edu/projects/mmt/ambedkar/web/ 
அம்பேத்கார் தலித் மக்களின் நலனைக் காப்பதையே தன் நோக்கமாகக்கொண்டிருந்தார். அதற்காக பிரிட்டிஷ் காலனீய அரசு, மகாத்மா காந்தி முதல் அனைத்து தரப்பினருடனும் உரையாடலில் இருந்தார். அதுபோல சாவர்க்கருடனும் உரையாடியிருக்கிறார். இந்து என்ற அமைப்பு எந்த வகையிலாவது சாதியை உள்ளே கொண்டுவந்துவிடும் என்று அவர் அறிந்திருந்தார். அதனால்தான் பிறக்கும்போது இந்துவாகப் பிறந்த தான் இந்துவாக இறக்கவிரும்பவில்லை என்று அறிவித்தார். அறிவித்தபடியே பௌத்தருமானார். 
10. என்னைப் போன்ற அநாமதேயமான ஒரு நபர் எழுதுகிற கட்டுரைக்கே அலறியடித்து பதில் எழுதி இந்து மூல நூல்களின் பவித்திரத்தை காக்க விரும்புகிற இந்துத்துவ பிரதிநிதி அரவிந்தன் நீலகண்டனா இந்து சாத்திரங்களை தூக்கி எறிந்துவிட்டு அம்பேத்கார் விரும்பிய ‘சங்காத்தனை’ உருவாக்க உழைக்கப்போகிறார்?  இல்லை இவரைப் போன்றவர்கள் இந்து என்ற பெயரை மதத்திற்கும் தேசத்திற்கும் மாற்றி மாற்றி அரசியல் விளையாடுவதை அம்பேத்கார்தான் ஏற்றுக்கொண்டிருப்பரா? 

6 comments:

Venkatesan Chakaravarthy said...

// சாதிக்கு அப்பாற்பட்டு இந்து மதம் என்று என்ன இருக்கிறது?

இதற்கு உங்கள் பதில் என்ன?

mdmuthukumaraswamy said...

இந்து மதத்தினைப் போல முழுமுற்றான தனிமனித விடுதலைக்கான மார்க்கங்களை வழங்குகின்ற மதம் வேறெதுவும் கிடையாது என்பது என் எண்ணம். பௌத்தம், சமணம், கிறித்தவம், இஸ்லாம், யூதமதம் ஆகியன குழு அல்லது சமூக முன்னேற்றத்தை முன் நிறுத்துவன. இந்து மதத்தின் தனி மனித விடுதலைக்கான மார்க்கங்களை சமூக தளத்திற்கு மாற்றும்போது ஒன்று அவை சாதியாக சமூகத் திரளாக்கம் பெறுகின்றன அல்லது பண்பாட்டு கூட்டு நடவடிக்கையாக (பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் எந்தவிதமான விழுமியங்களின் உள்ளீடற்ற) வடிவம் பெறுகிறது. சாதியை முற்றாக ஒழித்துவிட்ட இந்து மதம் அழகும் பண்பும் கூடிய intensely personal religion ஆக இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. சாதிக்குள்ளிருந்து மத நம்பிக்கையாளர்கள் பலரும் கூட தனிமனித ஆன்மீகவாதிகளாகவே இருக்கிறார்கள். இந்துமதத்தையும் சமூக தளத்தினையும் இணைக்கும் முயற்சிகள் சாதி அமைப்பாகவோ அல்லது வேறெந்த விபரீதமாகவோதான் போய் முடியும். தனி மனித மதமாக இந்து மதம் வழங்குகின்ற நெகிழ்ச்சியும் தாராளமானது. ஒரு இந்து வேறு மதக்கடவுளை வணங்கினாலோ தனக்கென்று ஒரு permutation combination வைத்துக்கொள்வதாலோ அல்லது முழு அவநம்பிக்கையாளனாக இருப்பதாலோ யாரும் கவலைப்படப் போவதில்லை. எனவே இந்து மதத்தை சமூகத் திரளாக்கத்துக்கான கருவியாகக் காணாமல் தனி மனித விடுதலை மார்க்கமாக விட்டுவிடுவதுதான் நல்லது. சாதியை ஒழிக்க ஒழிக்க இந்து மதத்தின் தனி மனித ஆன்மீக பரிமாணம் இன்னும் வலுப்பெறும்.

Venkatesan Chakaravarthy said...

மிக்க நன்றி. மேலும் விரித்து ஒரு கட்டுரை நீங்கள் எழுதினால் பயனுள்ளதாக இருக்கும் என்பது என் எண்ணம்.

வெறும் தனி மனித விடுதலை மார்கமாக ஏற்பதில் சில சந்தேகங்கள். கோவில்களை பண்பாட்டு கூட்டு நடவடிக்கை என்று கொள்ளலாமா? தனி மனித விடுதலை மார்கத்தில் கோவில்களுக்கு இடம் உண்டா? அல்லது கோவில்கள் சரி, விழாக்கள் தவறு என சொல்லலாமா? சிலர் தேர்ந்தெடுத்த permutation,combination ஒரு குறிப்பிட்ட common aspect கொண்டிருக்கும் போது அவ்விஷயத்தில் **மட்டும்** ஒரு குழுவாக சேர்ந்து செயல்படலாமா? உதாரணமாக தேவாரத்தில் ஈடுபாடு கொண்டோர் ஒன்றாக சேர்ந்து ஓதலாமா? அல்லது இந்த நடவடிக்கைகள் ஏதாவது விபரீதத்தில் கொண்டு போய் விடுமா?

mdmuthukumaraswamy said...

தென்னாட்டுக் கோவில்கள் தனி மனித உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள உறவினை கட்டிடக்கலையின் வழி பருண்மைப்படுத்துகின்றன. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அகோரசிவனின் திருவிழாக்களுக்கான வழிமுறைக் கையேட்டினை வாசித்தீர்கள் என்றால் திருவிழா பங்கேற்பிலும் கோவில் வழிபாட்டினைப் போலவே தனி மனிதனே பிரதானப்படுத்தப்படுவது தெரியும். அந்தரங்கமான ஆன்மீகத் தனி அனுபவத்திற்கான பொது வெளிகளாகவே கோவில்களும் திருவிழாக்களும் இந்து மதத்திற்குள் வடிவம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை கூட்டு கேளிக்கையாக மாற்றியதில் பக்தி இயக்கத்திற்கு பெரும் பங்குண்டு. குழுச்செயல்பாடு என்பது வேறு சமூகத் திரளாக்கம் என்பது வேறு. குழுச்செயல்பாடின்றி சமூகம் இருக்க முடியாது அதுவே விரிந்து சமூகத் திரளாக்கமாக மாறுவது இணையத்தின் சமூக வலைத்தளங்களின் மூலமாகக்கூட நடைபெறலாம். நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் சமூகத் திரளாக்கத்திற்கு இந்து மதம் ஏன் உகந்ததில்லை என்று.

Venkatesan Chakaravarthy said...

புரிகிறது. உங்கள் பதிலுக்கு நன்றி. நான் மேலே கேட்டுக் கொண்டது போல இது குறித்து ஒரு கட்டுரை எழுதினால் நலம் பயக்கும்.

suvanappiriyan said...

தெளிவான விளக்கங்கள். தொடர்கிறேன்.