Saturday, November 5, 2011

அம்மா பாடியது



'காடு'/ஓவியர்: ப்ரஃபுல்லகுமார் மகாரானா


தனித் தனி குமிழ்களுக்குள் 
அடைந்து விட்ட
பட்சிகளும்
மிருகங்களும்
தாவரங்களும் 
நிறைந்திருக்கும் வனாந்திரத்தில் 
அம்மா பாடியது

மூலம் தொலைத்த நதி
ஓடையாய் ஒழுகி
தன் போக்கில்
அலட்சியப் பிராவகமாய் விரியும் 
வனாந்திரப் போக்கின் கரையில்
நின்று
அம்மா பாடியது

சிள் வண்டும் ஒலிக்கா 
நிசப்தத்தில் 
எந்தத் தனிக் குமிழையும் 
உடைக்கத் திராணியற்று
பூஞ்சை குழந்தைக்கு 
யாருமில்லையென
குரலுடைந்து
அம்மா பாடியது

ஆராரோ ஆரிராரோ
கண்ணே நீ ஆராரோ
யாரடிச்சு நீ அழுத
அடிச்சவரை சொல்லி அழு
ஆராரோ ஆரிராரோ
கண்ணே நீ ஆரிராரோ



2 comments:

Anonymous said...

MDM,
சிள் வண்டு அல்லவா ?

mdmuthukumaraswamy said...

தட்டச்சுப் பிழை. சுட்டிக்காட்டியதற்கு நன்றி. பிழை திருத்திவிட்டேன்