Wednesday, October 19, 2011

ஜெயமோகனின் எம்.டி.முத்துக்குமாரசாமியின் விமர்சன அடித்தளம் கட்டுரைக்கு எதிர்வினை


ரசனை விமர்சனம் பண்டு தொட்டு இருந்து வருவதுதான். ஒவ்வொரு காலகட்டத்திலும் அது சமூக ஏற்ற தாழ்வினை நிலை நிறுத்துகிற அழகியல் கோட்பாடாகவே இருந்து வருகிறது. நவரசங்களை வரைமுறைப்படுத்தி பகுக்கும் நாட்டிய சாஸ்திரமும் எண்சுவையை வரைமுறைப்படுத்தி பகுக்கும் தொல்காப்பியமும் எந்தெந்த ரசனை எந்தெந்த சுவை எந்தெந்த வகுப்பு மக்களுக்கு உரித்தானது என்றும் கூறி சமூக சாதீய ஏற்றதாழ்வினை அழகியலாக அறுதி செய்கிறது. நாட்டிய சாஸ்திரம் உதாரணமாக சாந்தம் என்ற ரசமே நவரசங்களில் மிகவும் உயர்ந்தது உயர் சாதியினருக்கு உரியது சிருங்காரம், ஹாஸ்யம் கீழ் சாதியினருக்கு உரியது என்கிறது. சாந்தம் தவிர்த்த எண்சுவையை விவரிக்கும் தொல்காப்பியமும் இவ்வாறாகவே சுவைகளை சமூக சாதீய ஏற்றதாழ்வுகளுக்கு ஏற்ப படிவரிசைப்படுத்துகிறது. நம் சமகாலத்தில் ஏற்ற தாழ்வுகளை அறுதி செய்யும் அழகியலான ரசனை விமர்சனம் சந்தைப்பொருளாதாரத்தின் ஏற்றதாழ்வுகளையும் மதிப்பீடுகளையும் அழகியலாக்கும் முறைமை என்கிறேன். 


உமணரின் சந்தையும் உப்பும் ஒவ்வொரு வரலாற்று காலகட்டத்திலும் என்னவாக இருந்தது என்று பார்க்கத்தெரிந்தால், ரசனை அழகியலுக்கும், ஒற்றை இந்திய அரசியலுக்க்கும் உள்ள தொடர்பையும் பார்க்கலாம். எஸ்ரா பவுண்டையோ, அல்லது ஹெரால்ட் ப்ளூமையோ அப்புறம் பார்க்கலாம்.
நமது வேர்களை கற்றுணர்ந்த நிபுணர், வரலாற்றினை அறிந்த படிப்பாளி, இருபது வருடங்களாக தேங்கிக்கிடக்காத குட்டை, ரசனை விமர்சன கூக்குரல் ஜெயமோகனுக்கு  ரசனை விமர்சனத்தின் இந்திய வேர்களையும், அமைப்பியலின் synchronic approach-ஐயும் நான் பாலபாடமாக சொல்ல நேர்ந்தது இன்றைய காலையின் துரதிர்ஷ்டம்தான்.
இனி தனி நபர் தாக்குதல்: சந்தைப்பொருளாதாரத்தின் விமர்சன முறைமையாக உள்ளது என்று ரசனை விமர்சனத்தை condemn பண்ணுகிற நான் சந்தைப்பொருளாதார முதலாளித்துவத்தின் மேல் வெறுப்பைத்தானே வெளிப்படுத்துகிறேன்? இது எப்படி ஃபோர்ட் ஃபவுண்டேஷன்/அமெரிக்க முதலாளித்துவம்/ திருச்சபையின் குரலாகும். நான் வேலை பார்க்கும் நிறுவனம் ஃபோர்ட் ஃபவுண்டேஷன் நிதியுதவியை சமீப காலம் வரை பெற்று வந்த நிறுவனம்தான். நான் வேலைபார்க்கும் நிறுவனத்தில் நான் ஒரு பணியாள். இப்படியாகவே ஒவ்வொருவரும் வேலைபார்க்கும் நிறுவனத்திற்கு எங்கெங்கெல்லாமிருந்து நிதி வருகிறது என்று கணக்கெடுத்து நாம் சிந்தனைத் துறை விவாதங்களை நடத்துவோமா?
‘நாம்‘ என்றெழுதினால் ஜெயமோகன் என்று எப்படி அர்த்தமாகும்? அவரைப் பெயர் குறிப்பிடாமல் ‘நாம்தான் கழிசடை சினிமாவிற்கு கதை எழுதிக்கொண்டு, கீதை படித்துக்கொண்டிருக்கிறோமே‘ என்று வேறொரு இடத்தில் எழுதிருக்கிறேனாம். நான் வியாபார சினிமாவுக்காக வேலை பார்த்திருக்கிறேன் என்று இவருக்குத் தெரியுமா, கீதைக்கு வியாக்கியானம் செய்வது என் ஆசிரியத்தொழிலின் ஒரு பகுதி என்று இவருக்குத் தெரியுமா? நாம் என்று எழுதினால் நாம் என்று எடுத்துக்கொள்வதுதான் நல்லது. அந்த நாம் ஜெயமோகனையும் உள்ளடக்கியிருக்குமென்றால் நான் ஏதும் செய்வதிற்கில்லை. கீதைக்கு உரை எழுதுபவர்கள் தனக்குத்தானே இது பின் நவீனத்துவகீதை என்று லேபிள் ஒட்டிக்கொள்வதில்லை. லேபிள் ஒட்டுவது யார் என்று வாசகர்களே முடிவு செய்யலாம். 
மன்னிக்க வேண்டும் ஜெயமோகன். நிறைய எழுதக்கூடியவராக இருக்கிறீர்கள்,  நிறைய படிக்கிறீர்கள், நல்ல குருக்களிடத்து பாடம் கேட்டிருக்கிறீர்கள். இவன் இவ்வளவுதான், இவன் இடம் இதுதான் என்று தீர்ப்பு கூறி சம்பந்தாசம்பந்தமில்லாமல் ஒப்பீடுகள் நிகழ்த்தி, நான் ஒரு அதாரிட்டியாக்கும், படைப்பாளியாக்கும் என்ற சவடால்கள், தொடைதட்டல்களை விட்டுவிட்டு உங்களால் முடிந்த பங்களிப்புகளை தமிழுக்குச் செய்யுங்கள். உங்கள் நண்பன் உங்கள் பங்களிப்புகளைத் தமிழுக்குக் கோருபவன் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் இதுவரை எழுதியிருக்கும் non-fiction அனைத்தையும் தயவுசெய்து தீவிர மறுபரிசீலனைக்கு உட்படுத்துங்கள். உங்களை வரி வரியாகப்படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். 
ஜெயமோகனுக்கு மேலும் சில விவாத சட்டகங்கள் எழுத உத்தேசித்திருந்தேன். என்ன செய்ய இந்தக் குறிப்பை எழுத நேரிட்டது.

13 comments:

Anonymous said...

அன்புள்ள எம்.டி.எம்

உங்கள் விலகல் வருத்தமளிக்கிறது.

நான் தனிப்பட்ட தாக்குதலில் இறங்கவில்லை, எப்படி என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை என் கருத்துக்களுக்கான பின்னணி என நீங்கள் நினைக்கிறீர்களோ அதைப்போலவே நானும் நினைக்கிறேன். அதையும் கருத்தில்கொண்டு ஆராய்கிறேன்,அவ்வளவுதான்

என்னைப்பொறுத்தவரை தனிவாழ்க்கை கருத்துக்கள் என வேறுபாடு ஏதும் இல்லை. ஆனால் பிறரது அந்தரங்கவாழ்க்கையை நான் அளவுகோலாகக் கொள்வதில்லை. உங்கள் அந்தரங்க வாழ்க்கைக்குள் எவ்வகையிலும் நான் நுழையவே இல்லை என்பதை உணர்வீர்கள் என நினைக்கிறேன்.

ரசனை விமர்சனம் இறந்தகாலத்தில் மேலாதிக்கத்தை உருவ்க்கியதுதான் என நானும் அறிவேன். அதை மீண்டும் மீண்டும் முன்வைத்து வருகிறேன். ஆனால் அந்த மேலாதிக்கத்துடன் விவாதிப்பதற்கான வெளி அதில் எப்போதும் உள்ளது என்பதே என் எண்ணம். ஒரு நூற்றாண்டுக்குள் ரசனைவிமர்சனம் முன்வைக்கும் canon மாறிவிடுவதை அதற்கு ஆதாரமாக கொள்வேன். எப்படி கந்தபுராணம் மூலப்பெரும்படைப்பு என்ற நிலையில் இருந்து விலகியது, எப்படி மதநூல்களின் இடம் கீழிறங்கியது என நாம் கண்டுகொண்டிருக்கிறோம்

அத்தகைய மேலாதிக்கத்தை எந்த அறிவுசெயல்பாடும் எப்போதும் உருவாக்கிக்கொண்டேதான் இருக்கிறது. ரசனை விமர்சனம் எப்போதுமே diachronic அணுகுமுறையையே கொண்டிருக்கிறது. வேறுவழியில்லை ஏனென்றால் அது canon னை உருவாக்கி நிலைநாட்டியாகவேண்டும். பின்நவீனத்துவ முறை synchronic முறையை கைக்கொள்ளலாம். ஏனென்றால் அது எதிர்நிலை மட்டுமே எடுத்தால்போதும். கலைத்தாலே போதும்.
இரு அணுகுமுறைகளுமே தங்களுக்கான எல்லைகளும் வரையறைகளும் கொண்டவை என்பதே என் எண்ணம். இரண்டும் ஒன்றை ஒன்று நிரப்பக்கூடும். நீங்கள் என் அணுகுமுறையை மறுக்கலாம். ஆனால் அதை பிற்பட்டது, காலாவதியானது என முத்திரைகுத்துவதை என்னால் ஏற்க முடியாது. அது அதிகாரச்செயல் உங்கள் முறை அதிகாரமற்றது என்பதையும் ஏற்கமுடியாது. இதுவே என் தரப்பு.
நீங்கள் எழுதுவது எதையும் தொடர்ந்து வாசித்து வருபவன். இனிமேலும் வாசிப்பேன். சொல்லப்போனால் சில்வியா மீண்டு வரவேண்டுமென விழைபவர்களில் ஒருவன்.
நீங்கள் நிறுத்திக்கொள்வதனால் நானும் நிறுத்திக்கொள்கிறேன். நாம் பரஸ்பர புரிதலுடன் பிறகெங்காவது விவாதிக்க முடியலாம். ஆனால் நீங்கள் என் படைப்புகளை வாசிக்கவேண்டும் விமர்சிக்கவேண்டும் என்றே விரும்புகிறேன். இலக்கிய ஆக்கத்துக்கும் கருத்துக்களுக்கும் உள்ள ஊடாட்டத்தின் மர்மங்களையும் தற்செயல்களையும் புரிந்துகொள்ளாத வாசிப்புகளால் எப்போதுமே சோர்ந்திருக்கிறேன். அதுவே உங்களிடம் என்னை எதிர்பார்க்கச் செய்கிறது.
என்னுடைய புனைவெழுத்து எதையும் நான் எடுத்து முன்செல்வதில்லை. ஒன்றை எழுதியதுமே அதை உதறி முன்செல்பவனாகவே இருந்திருக்கிறேன். அபுனைவு எழுத்துக்களையும் மறுபரிசீலனைசெய்கிறேன். அதற்காக உங்கள் எழுத்துக்களை கவனிக்கிறேன்.

நவீனத்தமிழின் முக்கியமான சிந்தனையாளன் எனநான் நினைக்கும் ஒருவர் நீங்கள். நீங்கள் புண்பட நான் காரணமாகியிருந்தால் மீண்டும் மன்னிப்புகோருகிறேன். நான் உங்கள்வரிகளால் புண்படவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் - நாம் பற்றிய உங்கள் விளக்கங்களுக்கு முன்னரேகூட. அந்த தெளிவுபடுத்தலால் உங்கள் வாசகர்கள் புரிதலை அடைந்திருப்பார்கள்.

உங்கள் விலகல் உண்மையிலேயே வருத்தமளிக்கிறது.

ஜெயமோகன்

Anonymous said...

MDM is not withdrawing, or is he? Where exactly he says that?

On a scale of 1 to 10 you can't measure everything, which JeMo is fond of doing. He recently did that for Sujatha and now Bharathi. He fails to account for the effects of a personality on a given masses at the given time. After somebody gone for good 80 years you can't accurately say how useful a person at that time based only on text available and lot of guess work.

mdmuthukumaraswamy said...

அன்புள்ள ஜெயமோகன்:
நான் விவாதத்திலிருந்து விலகவில்லை. தொடர்ந்து விவாதம் செய்ய தயாராகவே இருக்கிறேன். இன்றைக்கு நான் எழுத உத்தேசித்திருந்ததை விட்டுவிட்டு வேறு எழுத வேண்டியதாயிற்று என்பதை மட்டுமே பதிவு செய்தேன். அலுவலக வேலைக்காகச் செல்வதால் மீண்டும் இரவு அல்லது நாளைக்காலை தொடர்கிறேன்.
அன்புடன்
எம்.டி.எம்

Aranga said...

உங்கள் இறுதிபாரா அப்படி தெனித்துவிட்டது எம்டிஎம் , உங்களை ஆர்வத்தோடு தொடர்கிறேன் .

ஜமாலன் said...

தொடர் விவாதத்தை கவனித்துக் கொண்டிருப்பவன் என்றவகையில்.. ஜெயமோகன் அவர்கள் எம்.டி.எம் பற்றிய தனிப்பட்ட தாக்குதலாக போர்டு பவுண்டேஷனை சுட்டி எழுதியிருப்பது வாதப் பொறுத்தமற்றதாக உள்ளது. அது கண்டனத்துக்கு உரியதும்கூட. எம்.டி.எம்.மின் எழுத்திலிருந்து அவர் அமெரிக்க சார்புநிலை என்பதை வருவித்து வாதம் வைக்கப்பட்டால் ஒழிய இத்தகைய தனிமனித தாக்குதல் என்பது ரசனைவாதத்தின் ஒரு முக்கிய கோட்பாட்டு விளைவு அல்லது மனஅமைப்பு சார்ந்தது என்பதை தவிர சொல்வதற்கில்லை.
மற்றபடி ஜெமோ வழக்கம்போல அவரது கட்டுரையில் சாரமாக ஒரு வேறுபாட்டைக் குழப்பிக்கொள்கிறார். அதாவது ரசனை என்பது ஒருவரது சுவை சார்ந்த விஷயம். ரசா என்பது நிர்மாணிக்கப்பட்டக் கோட்பாடு. அதுவும் நிகழ்த்துக்கலைகளுக்காக. அதை எழுத்திலக்கியத்திற்கு பயன்படுத்தலாமா? காவியங்கள் அந்த அடிப்படைகளைக் கொண்டதுதானா? என்கிற வாத-விவாதங்கள் உள்ளன. ரசனைவாதம் என்பது அந்தந்த கால சமூகங்களின் சுவையை வெகுமக்கள் சுவையாக மாற்றும் ஒன்று. அப்படி மாற்றப்படுவதால் அது சந்தையோடு அதன் அதிகாரத்தோடு உறவு கொண்டதாக உள்ளது. அதனால்தான் காலங்காலமாக ரசனைவாதம் மையமான இலக்கியகோட்பாடாக ஒரு எழுதாக்கிளவியாக உள்ளது. இலக்கிய வாசிப்பின் அடிப்படை சுவை சார்ந்தது அல்லது ரசனை சார்ந்தது. அந்த சுவை அல்லது ரசனை உருவாக்கப்படுவது அந்தந்த கால இலக்கிய கோட்பாட்டாளர்களால். அது இலக்கிய பெருமதிப்பாக (canon) சமூகத்தின் ”இலக்கிய நனவிலியாக” மாறிவிடுகிறது.
இந்த உரையாடலில் உள்ள பல கோட்பாட்டு பெறுமதிகளை எனக்கு புரிந்த வகையில் ஒரு பதிவாக இன்று நாளை இடுகிறேன். ஒன்றைமட்டும் சொல்கிறேன். இன்று பரவலான சந்தை மதிப்புகொண்ட இலக்கிய எழுத்தாக அறியப்பட்டிருப்பதும், பதிப்பகங்கள் தேடி வெளியிடும் இலக்கிய பெருமதிக் கொண்டதாக உள்ளதும் யாருடையவையாக உள்ளன என்பதே தாமிரவருணியில் ஓடும் தண்ணீர் பற்றிய கணக்கை தரும்

Anonymous said...

///சாந்தம் தவிர்த்த எண்சுவையை விவரிக்கும் தொல்காப்பியமும் இவ்வாறாகவே சுவைகளை சமூக சாதீய ஏற்றதாழ்வுகளுக்கு ஏற்ப படிவரிசைப்படுத்துகிறது///

தொல்காப்பிய காலத்தில் சாதிமுறை இருந்ததா? தமிழ்நாட்டில் சாதி எப்போது தோன்றியது?

Anonymous said...

முதல் ரவுண்ட்லேயே ஆள் காலி மாமே. நீ வுடாதே விவாதம் முடில அப்டின்னு டபாய்ச்சுகினே இரு.

Anonymous said...

மக்கா, அடிமுற ஆசான்கிட்ட ஜாக்ரதயா இரு. ஒன்ன வச்செ நாலு புக்கு போட்டுடுவான் நீ பெப்பேன்னு நிப்பே.

selventhiran said...

மதிப்பிற்குரிய எம்.டி.எம் அவர்களுக்கு, அறிவுதளத்தில் இரு ஆளுமைகளுக்கு இடையே நடக்கும் விவாதமாகத்தான் பொதுவாசகன் இதை எட்ட நின்று வாசிக்கிறான். இடையில் அணானிகளின் கீழ்த்தரமான பின்னூட்டங்களையும் அனுமதிக்க வேண்டுமா?! பெயரைக் கூட வெளிப்படுத்திவிட திராணி இல்லாதவர்களுக்கு கருத்துச் சொல்லும் அருகதையுண்டா என்ன...?!

mdmuthukumaraswamy said...

செல்வேந்திரன்: சில பின்னூட்டங்களைப் படிக்கும்போது வருத்தமாகத்தானிருக்கிறது. எனக்கு வருகின்ற பின்னூட்டங்களையெல்லாம் படித்து தேர்வு செய்து வெளியிட நேரமில்லை. நம்முடைய நோக்கம் ஒரு ஆரோக்கியமான பொது விவாதத்தை நடத்தமுடியுமா என்று பார்ப்பதும்தானே.விவாதத்தின் தரத்தை இன்னும் உயர்த்தி பரிசோதிப்போம் என்ன நடக்கிறது என்று.

mdmuthukumaraswamy said...

தொல்காப்பிய காலத்திலேயே சாதிமுறை வந்துவிட்டதா என்று கேட்ட நண்பருக்கு: பெரும்பாலான தமிழ் அறிஞர்கள் தொல்காப்பிய காலத்தில் சாதி அமைப்பு தமிழகத்தில் இல்லை என்றே வாதிடுகிறார்கள்.
'மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழ்ழொர்க்காகிய காலமும் உண்டே' போன்ற தொல்காப்பிய சூத்திரங்களை (மூன்று வருணத்தார் கீழே ஒரு குலம் என்பது எளிய பொருளாக்கம்) பின்னாள் இடைச்செருகல் என்றே தொல்காப்பிய ஆராய்ச்சியாளர்கள் குறிக்கிறார்கள். ஆனால் கவிதையின் தலைவனும் தலைவியும் உயர்குடிப்பிறப்பாளனாக இருக்க வேண்டும் என்ற விதி முறை, எட்டு மெய்ப்பாடுகளையும் வகைப்படுத்தும் முறைமை சாதிக்கு நிகரான ஏற்ற தாழ்வுள்ள சமூக அமைப்பு தொல்காப்பிய காலத்தே இருந்தது என்பதையே சுட்டுகின்றன

Anonymous said...

Dai Moodra muthukumaraswamy

krish said...

குழந்​தைகள் விரும்பக்கூடிய வண்ணவண்ண நிறத்தில் விதவிதமான பாக்​கெட்களிலும் டப்பாக்ககளிலும் அ​டைத்து விற்கப்படும் குழந்​தைகளுக்கான

திண்பண்டங்கள் பற்றிய சிந்த​னைதான் வருகிறது ரச​னை விமர்சனம் குறித்த விவாதங்கள். எப்​பொழுது க​டைக்குப் ​போனாலும் நமது பட்டியலில் உள்ள

​பொருட்களின் வி​லை​யை விட அதிகமான ஒரு வி​லைப்பட்டிய​லை நம் ​கையில் திணித்து விடுகிறார்கள் குழந்​தைகள். ​லேஸ், பிங்​கோ, குர்கு​ரே, ​

பைட்ஸ், கிண்டர் ஜாய், சீடாஸ் என நீண்டு ​கொண்​டே ​போகும் இந்த குழந்​தைக​ளை மயக்கும் திண்பண்ட ஐட்டங்கள் தான் பலசரக்கு க​டைகளில்

கண்​ணைக் கவரும் வண்ணம் ​தொங்கவிடப்படுகின்றன.

குழந்​தைகளுக்கு சலி, இருமல், வாந்தி, ​பேதி என் எந்த காரணத்திற்காக மருத்துவரிடம் ​சென்றாலும் முதலில் ​கேட்பது ​மே​லே ​சொன்ன அட்டவ​

ணையில் உள்ள ​பொருட்க​ளை வாங்கித் தருகிறீர்களா? சாப்பிடுகிறார்களா? என்பது தான். தவிர்க்கச் ​சொல்லும் முதல் பட்டியலும் அ​வைதான்.

சரி. என்ன தான் அவற்றில் இருக்கின்றன? ​சோறு சாப்பிட அடம் பிடிக்கும் குழந்​தைக​ளை எப்படி இ​வை மயக்கி ​வைத்திருக்கின்றன என சாப்பிட்டு

பார்த்தால் நம்​மையும் மயக்கும் சு​வையு​டைய​வையாகத்தான் அ​வை இருக்கின்றன. குழந்​தைக​ளே நமக்கும் சிபாரிசு ​செய்கிறார்கள், "சாப்பிட்டு பார்ப்பா,

சூப்பரா இருக்கும்!".

ஆனால், அவற்றின் உள்ளடக்கம் என்ன? எவ்வாறு அவற்றிற்கு அத்த​கைய சு​வை​யை ​கொண்டு வருகிறார்கள்? அது இயல்பான மனிதனின்

ஜீரணத்தன்​மையில் எத்த​கைய பாதிப்புக​ளை ஏற்படுத்துகின்றன? உடல்நலத்​தை படிப்படியாக மாற்றி நிரந்தர பிரச்சி​னைக​ளை அ​வை எவ்வாறு

ஏற்படுத்துகின்றன? என்ப​வைதான் நமக்கான முக்கியமான ​கேள்விகளாக உள்ளன.

சு​வை, ரச​ணை என்ப​வை​யெல்லாம் விவாதத்திற்கான ​பொருளல்ல அது வாசகன் அல்லது நுகர்​வோனுக்கும் ப​டைப்பாளன் அல்லது

தயாரிப்பாளனுக்குமான விற்ப​னை சம்பந்தபட்ட பிரச்சி​னை சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், விமர்சகர்க​ளை இத்த​கைய பாணியிலான விமர்சனம்

குறித்து ம​டைமாற்றிவிட நி​னைப்பது, தாங்கள் குறிப்பிட்ட​தைப் ​போல சந்​தைக்கான விதிமு​றைக​ளை பற்றியும், சந்​தையின் சாத்தியவரம்பிற்குள் நின்று

வியாபாரத்​தை ஊக்கிவிப்பது பற்றியும் ​பேசுவதின் வழி​யே நிகழும் காலகட்டத்தின் உற்பத்திமு​றை​யையும் அதன் ஆளும் வர்க்க நலன்களுக்கான

சமூகப், ​பொருளாதார, கலாச்சார, பண்பாட்டு விசயங்க​ளை ஏற்றுக்​கொள்ளவும் உயர்த்திப் ​பேசவுமான வழிமு​றையாகத்தான் படுகிறது.