Sunday, July 14, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-82

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-82

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி செவிலித்தாயை வாழ்த்தி தலைவிக்கு உணர்த்தியது

இயற்றியவர்: வெண்பூதனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 83

திணை: குறிஞ்சி

————

அரும்பெற லமிழ்த மார்பத மாகப்

பெரும்பெய ருலகம் பெறீஇயரோ வன்னை

நம்மிற் றமதுண் டன்ன சினைதொறும்

தீம்பழம் தூங்கும் பலவின்

ஓங்குமலை நாடனை வருமென் றோளே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தம் வீட்டின்கண் இருந்து தமது முயற்சியால் ஈட்டிய பொருளில் தம் கூற்றை உண்டாற் போன்ற இன்சுவையைத் தருவனவாகி, கொம்பு தோறும் இனிய பழங்கள் தொங்குகின்ற பலாமரங்களையுடைய உயர்ந்த மலைகளுள்ள நாட்டுக்குத் தலைவனை திருமணத்திற்குரிய பொருளோடு வருவானென்று கூறியவளாகிய அன்னை பெறுதற்கரிய அமிழ்தமே உண்ணும் உணவாக, பெரும்புகழுடைய சுவர்க்கத்தைப் பெறுவாளாக!

———-

அரும் பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆக

———-

தலைவன் தலைவியை மணம் முடிக்க வருவான் என உரைத்த செவிலித்தாயை தோழி பாராட்டுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. தொல்காப்பியம் களவியல் சூத்திரம் 123 தோழிதானே செவிலி மகளே என்று கூறுவதால் தோழி தன் தாயை அவள் கூறிய இன்சொல்லுக்காக வாழ்த்தியதாகவும் இப்பாடலை வாசிக்கலாம். ஆர்பதம்- என்றால் உணவு. கிடைத்தற்கரிய அமிழ்தம் தினசரி உட்கொள்ளும் உணவாகுக என்று தோழி செவிலித்தாயை வாழ்த்துகிறாள்.  குறுந்தொகை 201 ஆவது பாடலில் வரும், “அமிழ்தம் உண்க நம் அயலிலாட்டி” என்ற வரியிலிருந்தும் குறுந்தொகை 389 ஆவது பாடலில் வரும் வரி “ஆர்பதம் பெறுக தோழி” என்ற வரியிலிருந்தும் சிறப்பான உணவும், அமிழ்தம் போன்ற உணவு வாய்க்கப் பெறுவதுமாக வாழ்த்துவது மிகச் சிறந்த வாழ்த்துக்களுள் ஒன்று என நாம் அறியலாம்.  பெரும் புண்ணியம் செய்தோர்க்கே அமுதவுணவு  கிடைக்குமென்பதால் ‘அரும்பெற லமிழ்தம்’ என்றாள். கூடவே தோழி செவிலிதாய்க்கு பெரும் பெயர் உலகம் கிடைக்கவும் வாழ்த்துகிறாள். உ.வே.சா. பெரும் பெயர் உலகம் என்பதை சுவர்க்கம் என விளக்கமளிக்கிறார்.  பெறீஇயரோ –  என்பதில் இயர் – வியங்கோள் வினைமுற்று விகுதி, வாழ்த்துப் பொருளில் வந்தது, இ-சொல்லிசை அளபெடை  ஓ – அசைநிலை. 

——-

சினைதொறும் தீம்பழம் தூங்கும் பலவு

——-

தலைவனை அவன் சார்ந்திருக்கும் நிலப்பகுதியின் சிறப்பு இயற்கைக் காட்சிகளைக்கொண்டு அவனது இயல்பைச் சொல்வது சங்கப்பாடல்களின் மரபொழுங்கு என்பது இப்பாடலாலும் துலக்கம் பெறுகிறது.  கொம்பு தோறும் இனிய பலாப்பழங்கள் தொங்கும்  ஓங்கு மலை  நாடனே எனத் தோழி தலைவனை இப்பாடலில் அழைக்கிறாள். உண்டன்ன தீம்பழம் என மேலும்  கூட்ட வேண்டும். இன்பங்களுக்கு தாம் உண்ட இன்பத்தை உவமை கூறுதலை 1170 ஆவது திருக்குறள், “ தம்மிலிருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா வரிவை முயக்கு” எனக் கூறுவதை இங்கே இணைத்து வாசிக்க மேலும் துலக்கமாகும்.   தமது சொந்த வீட்டிலிருந்து தாம் முயன்று தேடிய செல்வத்தைக் கொண்டு உண்பதால் ஏற்படும் இன்பத்தைப்போல் இன்சுவை தருமாறு பலாமரத்தினது கிளைகள்தோறும் இனிய பலாப் பழங்கள் தொங்குகின்றன எனத் தமிழண்ணல் இதை விரித்து பொருள் சொல்கிறார்.  இரா. இராகவையங்கார்  தம் மனைக்கண்ணே தமக்குரியதென்று நூல் வகுத்ததை உண்டாற்போன்ற இன்பமுடைய நாடன் என்று உரை எழுதுகிறார். பலவு தொங்கும் காட்சிக்கு மலைப்படுகாடமில் வரும் “கரம் செல் கோடியர் முழவின் தூங்கி முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினைப் பலவே’ என்ற வரியையும் சேர்த்து நாம் நம் மனதில் நிலக்காட்சியைக் கொண்டுவரவேண்டும்.

——-

தோழி செவிலித்தாயை மட்டும் வாழ்த்தவில்லை

——

பெரும் பெயர் உலகம் களவினால் பெற இயலாதது; அது மணம் புரிந்து ஒழுகுவாருக்கு உரியது எனவும் தோழி தலைவனுக்கும் உணர்த்தியதால் அவன் மணம் செய்ய இசைந்திருக்கிறான். இதையே செவிலித்தாய் உரைத்திருக்கிறாள். இப்பொருள் களவு இன்பத்தில் துய்த்திருந்த தலைவன் “ தம் இல் இருந்து தமது பகுத்து உண்டது போல” என்ற வரியில் களவே போதும் என அவன் மயங்கி இருந்ததற்கான உட்குறிப்பு இருக்கிறது. பெரும் பெயர் உலகம் பெறுக என்று தோழி வாழ்த்துவது இல்லற வாழ்க்கையாலேயே அமையும் என்பதும்  இவ்வுலகமும் பெறுக என்பதையும் உள்கிடக்கையாகக் கொண்டதாகும். பலவின் பழம் சினைதொறும் தூங்கும் காட்சி தலைவி தலைவனை மணந்துகொண்டு இல்லறத்தில் எல்லா இன்பங்களையும் பெறுவதைச் சுட்டுவதாகும்.   குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-82

—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
தோழி செவிலித்தாயை வாழ்த்தி தலைவிக்கு உணர்த்தியது
இயற்றியவர்: வெண்பூதனார்
குறுந்தொகையில் பாடல் எண்; 83
திணை: குறிஞ்சி
————
அரும்பெற லமிழ்த மார்பத மாகப்
பெரும்பெய ருலகம் பெறீஇயரோ வன்னை
நம்மிற் றமதுண் டன்ன சினைதொறும்
தீம்பழம் தூங்கும் பலவின்
ஓங்குமலை நாடனை வருமென் றோளே
——-
உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:
——
தம் வீட்டின்கண் இருந்து தமது முயற்சியால் ஈட்டிய பொருளில் தம் கூற்றை உண்டாற் போன்ற இன்சுவையைத் தருவனவாகி, கொம்பு தோறும் இனிய பழங்கள் தொங்குகின்ற பலாமரங்களையுடைய உயர்ந்த மலைகளுள்ள நாட்டுக்குத் தலைவனை திருமணத்திற்குரிய பொருளோடு வருவானென்று கூறியவளாகிய அன்னை பெறுதற்கரிய அமிழ்தமே உண்ணும் உணவாக, பெரும்புகழுடைய சுவர்க்கத்தைப் பெறுவாளாக!
———-
அரும் பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆக
———-
தலைவன் தலைவியை மணம் முடிக்க வருவான் என உரைத்த செவிலித்தாயை தோழி பாராட்டுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. தொல்காப்பியம் களவியல் சூத்திரம் 123 தோழிதானே செவிலி மகளே என்று கூறுவதால் தோழி தன் தாயை அவள் கூறிய இன்சொல்லுக்காக வாழ்த்தியதாகவும் இப்பாடலை வாசிக்கலாம். ஆர்பதம்- என்றால் உணவு. கிடைத்தற்கரிய அமிழ்தம் தினசரி உட்கொள்ளும் உணவாகுக என்று தோழி செவிலித்தாயை வாழ்த்துகிறாள். குறுந்தொகைகுறுந்தொகை மூலமும் வாசிப்பும்-82
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
தோழி செவிலித்தாயை வாழ்த்தி தலைவிக்கு உணர்த்தியது
இயற்றியவர்: வெண்பூதனார்
குறுந்தொகையில் பாடல் எண்; 83
திணை: குறிஞ்சி
————
அரும்பெற லமிழ்த மார்பத மாகப்
பெரும்பெய ருலகம் பெறீஇயரோ வன்னை
நம்மிற் றமதுண் டன்ன சினைதொறும்
தீம்பழம் தூங்கும் பலவின்
ஓங்குமலை நாடனை வருமென் றோளே
——-
உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:
——
தம் வீட்டின்கண் இருந்து தமது முயற்சியால் ஈட்டிய பொருளில் தம் கூற்றை உண்டாற் போன்ற இன்சுவையைத் தருவனவாகி, கொம்பு தோறும் இனிய பழங்கள் தொங்குகின்ற பலாமரங்களையுடைய உயர்ந்த மலைகளுள்ள நாட்டுக்குத் தலைவனை திருமணத்திற்குரிய பொருளோடு வருவானென்று கூறியவளாகிய அன்னை பெறுதற்கரிய அமிழ்தமே உண்ணும் உணவாக, பெரும்புகழுடைய சுவர்க்கத்தைப் பெறுவாளாக!
———-
அரும் பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆக
———-
தலைவன் தலைவியை மணம் முடிக்க வருவான் என உரைத்த செவிலித்தாயை தோழி பாராட்டுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. தொல்காப்பியம் களவியல் சூத்திரம் 123 தோழிதானே செவிலி மகளே என்று கூறுவதால் தோழி தன் தாயை அவள் கூறிய இன்சொல்லுக்காக வாழ்த்தியதாகவும் இப்பாடலை வாசிக்கலாம். ஆர்பதம்- என்றால் உணவு. கிடைத்தற்கரிய அமிழ்தம் தினசரி உட்கொள்ளும் உணவாகுக என்று தோழி செவிலித்தாயை வாழ்த்துகிறாள். குறுந்தொகை 201 ஆவது பாடலில் வரும், “அமிழ்தம் உண்க நம் அயலிலாட்டி” என்ற வரியிலிருந்தும் குறுந்தொகை 389 ஆவது பாடலில் வரும் வரி “ஆர்பதம் பெறுக தோழி” என்ற வரியிலிருந்தும் சிறப்பான உணவும், அமிழ்தம் போன்ற உணவு வாய்க்கப் பெறுவதுமாக வாழ்த்துவது மிகச் சிறந்த வாழ்த்துக்களுள் ஒன்று என நாம் அறியலாம். பெரும் புண்ணியம் செய்தோர்க்கே அமுதவுணவு கிடைக்குமென்பதால் ‘அரும்பெற லமிழ்தம்’ என்றாள். கூடவே தோழி செவிலிதாய்க்கு பெரும் பெயர் உலகம் கிடைக்கவும் வாழ்த்துகிறாள். உ.வே.சா. பெரும் பெயர் உலகம் என்பதை சுவர்க்கம் என விளக்கமளிக்கிறார். பெறீஇயரோ – என்பதில் இயர் – வியங்கோள் வினைமுற்று விகுதி, வாழ்த்துப் பொருளில் வந்தது, இ-சொல்லிசை அளபெடை ஓ – அசைநிலை.
——-
சினைதொறும் தீம்பழம் தூங்கும் பலவு
——-
தலைவனை அவன் சார்ந்திருக்கும் நிலப்பகுதியின் சிறப்பு இயற்கைக் காட்சிகளைக்கொண்டு அவனது இயல்பைச் சொல்வது சங்கப்பாடல்களின் மரபொழுங்கு என்பது இப்பாடலாலும் துலக்கம் பெறுகிறது. கொம்பு தோறும் இனிய பலாப்பழங்கள் தொங்கும் ஓங்கு மலை நாடனே எனத் தோழி தலைவனை இப்பாடலில் அழைக்கிறாள். உண்டன்ன தீம்பழம் என மேலும் கூட்ட வேண்டும். இன்பங்களுக்கு தாம் உண்ட இன்பத்தை உவமை கூறுதலை 1170 ஆவது திருக்குறள், “ தம்மிலிருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா வரிவை முயக்கு” எனக் கூறுவதை இங்கே இணைத்து வாசிக்க மேலும் துலக்கமாகும். தமது சொந்த வீட்டிலிருந்து தாம் முயன்று தேடிய செல்வத்தைக் கொண்டு உண்பதால் ஏற்படும் இன்பத்தைப்போல் இன்சுவை தருமாறு பலாமரத்தினது கிளைகள்தோறும் இனிய பலாப் பழங்கள் தொங்குகின்றன எனத் தமிழண்ணல் இதை விரித்து பொருள் சொல்கிறார். இரா. இராகவையங்கார் தம் மனைக்கண்ணே தமக்குரியதென்று நூல் வகுத்ததை உண்டாற்போன்ற இன்பமுடைய நாடன் என்று உரை எழுதுகிறார். பலவு தொங்கும் காட்சிக்கு மலைப்படுகாடமில் வரும் “கரம் செல் கோடியர் முழவின் தூங்கி முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினைப் பலவே’ என்ற வரியையும் சேர்த்து நாம் நம் மனதில் நிலக்காட்சியைக் கொண்டுவரவேண்டும்.
——-
தோழி செவிலித்தாயை மட்டும் வாழ்த்தவில்லை
——
பெரும் பெயர் உலகம் களவினால் பெற இயலாதது; அது மணம் புரிந்து ஒழுகுவாருக்கு உரியது எனவும் தோழி தலைவனுக்கும் உணர்த்தியதால் அவன் மணம் செய்ய இசைந்திருக்கிறான். இதையே செவிலித்தாய் உரைத்திருக்கிறாள். இப்பொருள் களவு இன்பத்தில் துய்த்திருந்த தலைவன் “ தம் இல் இருந்து தமது பகுத்து உண்டது போல” என்ற வரியில் களவே போதும் என அவன் மயங்கி இருந்ததற்கான உட்குறிப்பு இருக்கிறது. பெரும் பெயர் உலகம் பெறுக என்று தோழி வாழத்துவது இல்லற வாழ்க்கையாலேயே அமையும் என்பதும் இவ்வுலகமும் பெறுக என்பதையும் உள்கிடக்கையாகக் கொண்டதாகும். பலவின் பழம் சினைதொறும் தூங்கும் காட்சி தலைவி தலைவனை மணந்துகொண்டு இல்லறத்தில் எல்லா இன்பங்களையும் பெறுவதைச் சுட்டுவதாகும்.
201 ஆவது பாடலில் வரும், “அமிழ்தம் உண்க நம் அயலிலாட்டி” என்ற வரியிலிருந்தும் குறுந்தொகை 389 ஆவது பாடலில் வரும் வரி “ஆர்பதம் பெறுக தோழி” என்ற வரியிலிருந்தும் சிறப்பான உணவும், அமிழ்தம் போன்ற உணவு வாய்க்கப் பெறுவதுமாக வாழ்த்துவது மிகச் சிறந்த வாழ்த்துக்களுள் ஒன்று என நாம் அறியலாம். பெரும் புண்ணியம் செய்தோர்க்கே அமுதவுணவு கிடைக்குமென்பதால் ‘அரும்பெற லமிழ்தம்’ என்றாள். கூடவே தோழி செவிலிதாய்க்கு பெரும் பெயர் உலகம் கிடைக்கவும் வாழ்த்துகிறாள். உ.வே.சா. பெரும் பெயர் உலகம் என்பதை சுவர்க்கம் என விளக்கமளிக்கிறார். பெறீஇயரோ – என்பதில் இயர் – வியங்கோள் வினைமுற்று விகுதி, வாழ்த்துப் பொருளில் வந்தது, இ-சொல்லிசை அளபெடை ஓ – அசைநிலை.

No comments: