Saturday, August 30, 2014

அமைதியின் வளையம் | பால் எலுவார்ட்




Paul Eluard and Jaques Lacan


அமைதியின் வளையம் | பால் எலுவார்ட்

இறுக்கத்தின்  கதவுகளை கடந்து வந்திருக்கிறேன்
என் கசப்புணர்வின் கதவுகளையும் கூட
வந்து உன் உதடுகளில் முத்தமிட

நகரம் ஒரு அறையாக குறுகி விட்டது
அங்கே தீமையின் அபத்த அலை
ஆசுவாசமளிக்கும் நுரையை விட்டுச்செல்கிறது

அமைதியின் வளையமே எனக்காக நீ மட்டுமே இருக்கிறாய்
நீ எனக்கு மீண்டும் கற்றுத் தா
துறக்கும்போது, மனிதத்தோடு இருப்பது என்றால் என்னவென்று

எனக்கு சக உயிரிகள் இருக்கிறார்களா என்றறிவதற்கு

------------------------------------------------------------------------------

ஃப்ரெஞ்சிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம்

Ring of peace | Paul Eluard 

I have passed the door of coldness
The doors of my bitterness
To come and kiss your lips

City reduced to a room
Where the absurd tide of evil 
Leaves a reassuring foam

Ring of peace I have only you
You teach me again what it is
To be human when I renounce 

Knowing whether I have fellow creatures 

Sunday, August 24, 2014

முல்லா நஸ்ருதீன் வளர்த்த முமுட்சு



வெவ்வேறு தமிழ் எழுத்தாளர்கள் வெவ்வேறு பிராணிகளை தங்கள் செல்ல பிராணிகளாக கவனத்தில் கொள்வதையும் குறிப்பிட்ட பிராணி நிபுணர் ஆவதையும் முல்லா நஸ்ருதீன் கவலையுடன் கவனித்து வந்தார். யானை, குதிரை, நாய், பூனை என்று சகல மிருகங்களையும் ஒவ்வொரு எழுத்தாளரும் தத்து எடுத்துக்கொண்டவர்கள் போல எழுதுவதும் பேசுவதும் தங்கள் பிராணிகள் எவ்வளவு உயர்ந்த வகை ஜாதியைச் சேர்ந்தது தெரியுமா என்று பெருமையடிப்பதும் நஸ்ருதீனுக்கு மிகுந்த எரிச்சலை கொடுத்தது. ஏனெனில் யாருமே அவருடைய செல்ல வளர்ப்பான கழுதையை சட்டை செய்யவில்லை. கழுதையின் மகிமையை காலத்தீயில் கணத்தில் கரைந்து போகும் இந்தக் கற்பூரங்கள் என்றுமே அறியப்போவதில்லை என்று நஸ்ருதீன் தனக்குள் சொல்லிக்கொள்வார். கழுதையைப் போல மனிதரிடத்து பந்தம் கொள்கின்ற வேறு பிராணிகளே உலகில் இல்லை என்று நஸ்ருதீன் அடித்தச் சொல்வார். கழுதைகளை அறிவது என்பது ஒரு நடுத்தர வர்க்கத்தினனை அறிவதாகும் என்ற ஞானம் நஸ்ருதீனுக்கு அவர் வளர்த்த கழுதையால் அவருக்குக் கிடைத்ததாகும்

பௌத்த தியானப் பயிற்சிகளில் ஒன்று ஒரு சிறிய அவரை விதையை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு அகப் பார்வையினால் அது காயான கொடி, கொடி படர்ந்த நிலம், வேர் பிடித்த மண் என்று கொஞ்சம் கொஞ்சமாக விரித்துக்கொண்டே போய் அவரை விதை சார்ந்த மொத்த நிலப்பகுதியையும் பார்க்க பழகுவதாகும். கழுதைகள் இந்த தியானப்பயிற்சியில் கரைகண்டவை. கழுதைகளால் மனிதர்களைப் பார்த்த உடனேயே  அவர்களின் முழு வரலாற்றினையும் சொல்ல முடியும் என்று நஸ்ருதீனுக்குத் தெரியும். அவை காள் காளென்று மனிதர்களைக் கண்டவுடன் பயத்தினால் அலறுவது அதனால்தான். 

கழுதைகளைப் பற்றி சமஸ்கிருதத்தில் நூல் ஒன்று இல்லை என்பது நஸ்ருதீனுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. சமஸ்கிருதத்தில் இல்லாத அறிவுத்துறை என்று எதுவுமே கிடையாதே அப்படி இருக்கையில் கழுதை வளர்க்கிற முல்லா நஸ்ருதீனுக்கு கழுதைகள் பற்றிய மூல நூல் எதுவும் தெரியாதென்றால் நஸ்ருதீனுக்குத்தானே அறிவு குறைவு என்று எல்ல்லோரும் நினைப்பார்கள்? எனவே நஸ்ருதீன் தானே கற்பனையாய் ‘கர்டாப தீபிகா’ என்றொரு கழுதை பற்றிய நூல் சமஸ்கிருதத்தில் இருப்பதாய் சொல்ல ஆரம்பித்தார். யாருமே அதற்கு ஆட்சேபணை தெரிவிக்காததால் ‘கர்டாப (गर्दभ) தீபிகா’ என்றொரு நூல் இருப்பது உறுதியாகிவிட்டது. 

கர்டாப தீபிகா அப்படியொன்றும் லேசுப்பட்ட நூல் இல்லை. வேதாந்த தரிசனத்தைக் கண்ட ஞானியே அந்த நூலையும் எழுதியிருக்கமுடியும். அவர் முக்காலத்தையும் அறிந்த ஞானியாகவும் இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யப்படுவது போல நார்ச்சத்து மிகுந்த உணவே கழுதைகளுக்கும் கொடுக்கப்பட வேண்டும் அதுவே அவற்றிற்கு உகந்த உணவாக இருக்க முடியும் என்று கர்டாப தீபிகாவின் முதல் சூத்திரத்திலேயே எழுதியிருக்கிறார். கர்டாப தீபிகாவுக்கு உரை எழுதிய ஐரோப்பிய ராஜ குலத்தில் பிறந்து இந்திய சன்னியாசியாய் வாழும் ரூல்டாஃப் ஹிம்லர் பாரத தேசமே நீரிழிவு நோயினால் பீடிக்கப்பட்ட நடுத்தரவர்க்கத்தினரால் நிரம்பியிருக்கும் என்ற தீர்க்கதரிசனமே கர்டாப தீபிகாவின் சாரம்சம் என்றும் சொல்லியிருக்கிறார்.

நடுத்தர வர்க்கத்தினர் போலவே கழுதை ஏகத்துக்கும் பொதி சுமக்க வல்லது. எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்யும். கழுதைகள் சமூகப் பிராணிகள். அவை தங்களை விட உயர்ந்த ஜாதியாகத் தங்களைக் கருதிக்கொள்ளும் குதிரைகளோடு எளிதில் சினேகம் கொள்ளக்கூடியவை. கழுதைகளின் சமூகவியலில் ‘சமஸ்கிருதமயமாதல்’ என்பது போல குதிரைமயமாதல் என்றொரு சமூகச்செயல்பாடு முல்லா நஸ்ருதீனால் அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

கழுதைகள் அப்புராணிகள் என்பதால் அவற்றுக்கு அக இலக்கியம் மட்டும்தான் உண்டு வீர தீர பிரதாபங்களைச் சொல்லக்கூடிய புற இலக்கியங்கள் கிடையாது. நஸ்ருதீனுக்கு கழுதைகள் விளிம்பு நிலை பிராணிகளாக ஒதுக்கப்படுவதற்கு அவற்றைப் பற்றி குதிரைகளுக்கு இருப்பது போல வீர தீர பிரதாபங்கள் இல்லாமையே என்று கருதினார். அப்பாவி கழுதைகள் மென் குணங்கள் உடையவையாய் இருப்பதும் பழகும் மனிதர்களோடு வேப்ப மர பிசின் போல ஒட்டிக்கொள்வதுமாக இருப்பதால் அவை கடத்தேற்ற இயலாத, இயற்கையால் கைவிடப்பட்ட மிருகங்கள் என்று ஒரு நாள் நஸ்ருதீன் தன் டைரிக்குறிப்பில் எழுதினார். 

நஸ்ருதீன் தன் கழுதைக்கு பெயர் சூட்டி அதன் வம்ச வரலாற்றினைப் பற்றி அவ்வபோது பேசுவது மூலமாக மட்டுமே தன் கழுதைக்கு மட்டுமாவது சமூக அந்தஸ்து உண்டாக்கமுடியும் என்று அறிந்தார். இந்த இந்திய மரபின் ஞானம் முல்லா நஸ்ருதீனுக்கு வெகு தாமதமாகவே வந்து சேர்ந்தாலும்  ஒரு வழியாக வந்து சேர்ந்ததே என்பதே பெரிய ஆசுவாசம்தான் அவருக்கு.

முல்லா நஸ்ருதீனின் கழுதை பெயர் இப்போது முமுட்சு. மகாபாரதத்தில் சொல்லப்படும் குரு வம்சம் சந்திர வம்சம் ஆகியவற்றின் மூதாதைகள் போல முமுட்சுவின் ஆதி மூப்பரான லொட்டு லொசுக்கும் கூட மேய்ச்சல் நிலப்பகுதியில் நாடோடியாய் திரிந்தவர்தான். லொட்டு லொசுக்கு, புசுக்கு, கொடுக்கு, மொடுக்கு, சொடுக்கு, டபக்கு என்று நீளும் முமுட்சுவின் ராஜவம்சத்தில் மேய்ச்சல் நிலங்களுக்கான அடிதடி இல்லை, போரில்லை, சண்டையில்லை, சடங்குகள் இல்லை, சம்பிரதாயங்கள் இல்லை. உண்மையைச் சொல்லப்போனால் லொட்டு லொசுக்கு வம்சத்தில் முமுட்சுவாக பிறப்பதற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும். 

முல்லா நஸ்ருதீனின் முமுட்சு பற்றிய சிந்தனைகள் அத்தனையுமே முமுட்சுவுக்கு இணை தேடப்போய் மணமகள் தேவை விளம்பரம் கொடுக்கப்போனபோது உண்டானதுதான் என்று வாசகர்கள் யூகிக்க இடமிருக்கிறது.


Saturday, August 23, 2014

யுவ புரஸ்கார் விருதுகள்

சங்கீத நாடக அகாடமியின் மையக்குழு உறுப்பினராக நான் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினேன். என்னுடைய நியமன பணிக்காலத்தில் மேதகு அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தார். சங்கீத நாடக அகாடமி மட்டுமல்லாமல் சாகித்ய அகாடமி, லலித் கலா அகாடமி ஆகியவற்றிற்கும் மைய பொதுக்குழு தலைவராக இருப்பவர் இந்திய ஜனாதிபதி ஆவார். ஒவ்வொரு வருடமும் பரிசளிப்பு விழாக்களை ஒட்டி அகாடமிக்களின் மையக்குழு கூட்டமும் நடைபெறும். பரிசளிப்பு விழா, தேர்ந்தெடுப்பிற்கான கூட்டம் இரண்டையும் ஒட்டி ஜனாதிபதி விருந்தளிப்பார். அந்த விருந்தினை மையக்குழு உறுப்பினர்களிடமிருந்து கருத்துக்களை நேரடியாகக் கேட்டுத்தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பமாகவும் ஜனாதிபதி பயன்படுத்திக்கொள்வார். 

நான் சங்கீத நாடக அகாடமியின் மையக்குழு உறுப்பினராக பணியாற்றிய ஐந்து ஆண்டுகளின் போது யுவபுரஸ்கார் விருதுகள் நிறுவப்பட்டிருக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் பரிசளிப்பு விழாக்களை பார்க்க பரிதாபமாக இருக்கும். பரிசு பெற தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மிகவும் முதுமையடைந்தவர்களாக இருப்பார்கள். பரிசு பெறுவதற்காக சிலரை நோயாளிப் படுக்கையில் வைத்தே தூக்கி வருவதை நான் பார்த்திருக்கிறேன். வேறு சிலர் மறைந்துவிட்டிருப்பார்கள். அவர்களுடைய வாரிசுகள் வந்து சம்பந்தமில்லாத முக பாவங்களோடு பரிசுகளை வாங்கிச் செல்வார்கள். வருடாந்திர பரிசுகள் மட்டுமே ஓரளவு விழாவுக்குரிய தோரணையுடன் மகிழ்ச்சியாக இருக்கும். தேர்வுக்குழு விவாதங்களின் போது இன்னார் முக்கியமான கலைஞர், அவருக்கு மிகவும் வயதாகிவிட்டது, இந்த வருடம் பரிசினைக் கொடுத்துவிட்டால் நல்லது, அடுத்த வருடம் என்ன நடக்குமோ தெரியாது என்ற வாதத்தினைக் கேட்கும்போது வயிற்றை பிசையும். மறு கேள்வி கேட்காமல் உறுப்பினர்கள் கையை உயர்த்தி முன்வைக்கப்பட்ட பெயருக்கு பரிசு கொடுக்க வாக்களித்துவிடுவார்கள்.  ஒரு முறை பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் அத்தனை வயசாளிகளுக்கும் ஒட்டும் மொத்தமாக ஒரே வருடத்தில் பரிசளித்துவிட்டால் என்ன என்றொரு யோசனையை முன் வைத்தார். பரிசு எனப்படுவது உரிய வயதில் திடகாத்திரமாக இருக்கும் போது வழங்கப்பட்டால்தான் பரிசு பெற்றவர் ஊக்கமடைந்து மேலும் பங்களிப்பாற்றுவார், பரிசுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும் என்று வாதிட்டார். நாங்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தோம்.

மத்திய வயதில் இருக்கும் கலைஞர்களுக்கு, இள  வயதில் இருப்போருக்கு அகாடமி விருதுகளும் பரிசுகளும் அளிக்கப்படவேண்டும் என்று மேதகு ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களிடத்து அந்த ஆண்டு விருந்திற்கு கூடியபோது கோரிக்கை விடுத்தோம். அதன் பிறகு உரையாற்றிய மேதகு அப்துல் கலாம் அவர்கள் தன்னுடைய தயாரிக்கப்பட்ட உரையிலிருந்து விலகி இள வயதினருக்கும் மத்திய வயதினருக்கும் அகாடமி விருதுகள் வழங்கப்படவேண்டும் என்பது உறுப்பினர்களின் அவா மட்டுமல்ல தன்னுடைய விருப்பமும் கூட என்று தெரிவித்தார். சொல்பவர் ஜனாதிபதி என்பதால் அவருடைய பேச்சே அரசாங்க ஆணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த வருடமே யுவ புரஸ்கார் விருதுகள் மூன்று அகாடமிக்களிலும் ஒன்றன் பின் ஒன்றாக நிறுவப்பட்டன.  

இன்று சாகித்திய அகாடெமியின் யுவ புரஸ்கார் விருது அபிலாஷின் ‘கால்கள்’ நாவலுக்கு வழங்கப்பட்டிருக்கும் செய்தியினை வாசித்தபோது மேதகு ஜனாதிபதி அப்துல் கலாமின் உடனடி செயலாற்றும் பண்பும், அவர் அறிவித்த நிகழ்ச்சியும்  நினைவுக்கு வந்தன. 


அபிலாஷுக்கு வாழ்த்துக்கள்.   

Thursday, August 14, 2014

அதிகமும் பாடல்பெற்ற விலங்கினம்



பூனைகளை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. ஆனால் பூனைகளின் புகைப்படங்களை விரும்பிப் பார்க்கிறேன்; சேகரித்து வைக்கிறேன். பிம்பமாகின்ற பூனைகளிடத்தே ஏதோஒரு மனித வசீகரம் அமைதியாவதாக எனக்கொரு எண்ணம் எப்பொழுதுமே உண்டு. அதனால்தான் கவிதைகளில் பூனைகள் அதிகமும் உலக இலக்கியத்தில் காணக்கிடைக்கின்றன. ‘பூனைக் கவிதைகள்’ என்றொரு தொகுப்பு கொண்டு வந்தால் அதுதான் உலக விலங்குகளிலேயே மிகவும் அதிகமாக பாடல் பெற்ற விலங்கினமாக இருப்பது தெரியவரும். டி.எஸ். எலியட் மட்டுமே எத்தனை பூனைக் கவிதைகள் எழுதியிருக்கிறார்! லண்டன் வீட்டுக் கூரைகளின் மேல் உரசிச்செல்லும் அதிகாலைப் பனியைப் பார்த்தால் கூட அவருக்கு கால்களை உரசும் மஞ்சள் பூனையோடுதான் ஒப்பிடத் தோன்றும். 

அல்டஸ் ஹக்ஸ்லி


பூனைகள் எழுத்தாளர்களின் கற்பனையை ஆக்கிரமிப்பதற்கான காரணம் அல்டஸ் ஹக்ஸ்லி எழுதிய வாக்கியத்தின் மூலம் எனக்குத் தெளிவாகியது. “காதலோடு தொடர்ந்து வசியப்படுத்த நினைக்கும் மனைவிப்பூனையின் முன்னால் நேரடியாக கொட்டாவி விட்டு தன்னுடைய பேரலுப்பினை ஆணவத்துடன் தெரியப்படுத்தும் சியாமிஸ் பூனையின் தைரியம் எந்த மனிதனுக்கும் வாழ்நாளில் வராது” என்று ஒரு முறை எழுதினார் ஹக்ஸ்லி. பூனைகளின் பாவனைகளைப் போல மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளை அவற்றின் போதாமைகளை சொல்லக்கூடிய வேறு வகை வெளிப்பாடுகள் நமக்குக் காணக்கிடைப்பதில்லை. 

சாமுவேல் பெக்கெட்


சாமுவேல் பெக்கெட் ஒரு சிறு கூடை நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் இரு பூனைகளை உற்று நோக்கும் புகைப்படம் ஒன்றினை பல மாதங்கள் என் கணினி திரை புகைப்படமாக வைத்திருந்தேன். பூனைகளை பிடிக்காத எனக்கே உற்று நோக்குவதற்காக என்றே ஒரு பூனையை வளர்க்கலாமா என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. பெக்கெட்டின் கதாபாத்திரங்களாகிய மர்ஃபியும் வாட்டும் பூனைகளை உற்று நோக்கியதால் உருவானவர்களே என்று என்னுள் விமர்சனக்குறிப்பொன்று ஓடிக்கொண்டே இருக்கும். 

எஸ்ரா பவுண்ட்


எஸ்ரா பவுண்டின் மூன்று பூனைகள் அவருடைய காலத்தில் மிகவும் இலக்கிய பிரசித்தி பெற்றவை. உலகப்போருக்கு பிந்தைய காலகட்டத்தில் பவுண்ட் தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டபோது அவரோடு அவருடைய மூன்று பூனைகளும் நீதிமன்ற விசாரணையை சந்தித்தன என்றொரு பேச்சு உண்டு.

போர்ஹெஸ்


போர்ஹெஸ் தன்னுடைய பூனையை ‘அலெஃப்’ என்ற அவருடைய முடிவின்மையின் பெயரால்தான் அழைத்திருக்கவேண்டும்; முடிவின்மை அது பாட்டுக்கு சோம்பல் முறித்துக்கொண்டிருக்க இவர் பாட்டுக்கு தன் அக தியானத்தில் ஈடுபடுபவராக இருந்திருக்க வேண்டும். 

சார்த்தர்


சார்த்தர் எழுதும்போது பல சமயங்களில் தன் பூனையினை ஒரு கையால் அணைத்துக்கொண்டுதான் எழுதுவார் என்று வாசித்திருக்கிறேன். அது உண்மையாக இருக்கமுடியாது என்றே நான் நினைப்பேன் ஏனென்றால் பூனையுடன் கூட அவ்வளவு அன்னியோன்யமாக உணர்ந்தவர் எப்படி அந்நியமாதலைப் பற்றி எழுதியிருக்க முடியும்? 

சார்ல்ஸ் புயுக்கோவ்ஸ்கி


ஒருவேளை, பூனைகள் எதுவுமே சொல்வதில்லையோ? பூனைப்புகைப்படங்கள் அத்தனையுமே ஏதோ ஒரு வைகையில் அபத்தமானவைதானோ? சார்ல்ஸ் புயுக்கோவ்ஸ்கி தன் பூனையுடன் இருக்கும் புகைப்படத்தினையும் அவர் எழுதியிருக்கும் ஒரு பூனை கவிதை வாசித்தலோடு இணைத்துப் பாருங்கள். 
The History Of One Tough Motherfucker
by Charles Bukowski (last verse)
I shake the cat, hold him up in 
the smoky and drunken light, he’s relaxed he knows… 
it’s then that the interviews end 
although I am proud sometimes when I see the pictures 
later and there I am and there is the cat and we are photo- 
graphed together. 
he too knows it’s bullshit but that somehow it all helps.

ஏதோ ஒரு வகையில் உதவியாக இருந்தாலும் இந்த பூனை புகைப்படவிவகாரமே அபத்தம்தான் என்று தோன்றும்.  

ஸ்ல்வியா ப்ளாத்


ஸில்வியா ப்ளாத் சிறுமியாக தன் கையில் பூனையுடன் நிற்கும் புகைப்படத்தையும் அவருடைய “And I a smiling woman. 
I am only thirty. 
And like the cat I have nine times to die” என்ற வரியினையும் படிக்கும்போது புயுக்கோவ்ஸ்கி சொல்கிற அபத்தம் உறுதிப்படும். 

ஜார்ஜ் பெர்னார்ட் ஷா


இருந்தாலும் நான் பூனை வளர்க்க நேரிட்டாலோ அல்லது பூனையை ஒரு காதாபாத்திரமாக ஏதேனும் ஒரு படைப்பில் உலவ விட்டாலோ நான் என் பூனைக்கு ஜார்ஜ் பெர்னார்ட் ஷா என்றுதான் பெயர் சூட்டுவேன். ‘பிக்மாலியனும்’ ‘’ஆப்பிள் கார்ட்டும்’ எழுதிய அவரே பூனைகளின் தந்திர ‘உலகப் பார்வையை’ இலக்கியத்தில் வெளிப்படுத்தியவர்.


நகுலனின் பூனைகள் பற்றி எழுத கை துறுதுறுக்கிறது. ஆனால் நான் எழுதப்போவதில்லை. எழுதுவானேன் எழுதி நண்பர் பேயோனுக்கு ‘சேவ் நகுலன்’ போல ‘சேவ் நகுலனின் பூனை’ என்றொரு கவிதை எழுத சந்தர்ப்பம் கொடுப்பானேன். 


Wednesday, August 13, 2014

ஆறு வார்த்தை கதைகளும் ஒரு வார்த்தை கவிதையும்

Narrative இலக்கிய பத்திரிக்கை ஆறு வார்த்தைகளில் மட்டுமே எழுதப்பட்ட கதைகளை பிரசுரத்திற்கு கோரியுள்ளது. மிகச் சிறிய வடிவங்களில் கதை, கவிதை எழுதப்படுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருக்கின்றபடியால் அதுவும் இந்த வார்த்தைப் பெருக்கம் (சுனாமி?) நிறைந்த தமிழ் இலக்கிய காலகட்டத்தில் என்னுடைய ஆர்வம் ஒன்றும் அவ்வளவு against the grain இல்லை என்பதை Narrative பத்திரிக்கையின் அறிவிப்பு உறுதிப்படுத்துகிறது.  சில ஆறு வார்த்தை கதைகளுக்கான ஆகச் சிறந்த உதாரணங்களாக பின் வரும் கதைகள் கருதப்படுகின்றன.

For sale: Baby shoes, never worn.
—Ernest Hemingway

Longed for him. Got him. Shit.
—Margaret Atwood

Without thinking, I made two cups.
—Alistair Daniel

Revenge is living well, without you.
—Joyce Carol Oates

வில்லியம் ஃபாக்னர் ஒரு முறை சொன்னார் தோற்றுப்போன சிறுகதை ஆசிரியனே நாவலாசிரியன்; தோற்றுப்போன கவிஞனே சிறுகதை ஆசிரியன் என்று. குறுகிய வடிவத்தில் சாதிக்க இயலாதவன்தான் பெரிய வடிவங்களைத் தேடிச் செல்லும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிறான்.  

ஆனால் ஃபாக்னர் அல்ல ஹெமிங்வேதான் ஆறு வார்த்தைகளினால் ஆன கதைகளை எழுதியவர்.

ஹெமிங்வேயையும் ஃபாக்னரையும் விட ஒரு படி தாண்டிச் சென்றார் மகானுபாவர் போர்ஹெஸ்; அவர் ஒர் வார்த்தையாலான கவிதையைத் தேடி சென்றவனைப் பற்றிய சிறுகதை எழுதினார். போர்ஹெஸின் ஒரு வார்த்தை கவிதையைத் தேடிச் சென்ற காதாபாத்திரம் நான்தான் என்று எனக்கு அடிக்கடி தோன்றும். அத்தனை அலங்காரங்களையும் துறந்து அத்தனை விவரணைகளையும் துறந்து மொழி நன்றாக பட்டைத் தீட்டப்பட்ட வைரம் போல ஜொலிக்கையில் மொழி அதன் தூய(?) வடிவத்தில் கவித்துவ தருணத்தை ஏற்படுத்துமானால் அதை மனிதர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ள முடியுமானால் அது எத்தனை பெரிய சாதனையாக இருக்கும்! நான் minimalist poetryஐ என்னுடைய கவிதைகளுக்கான வெளிப்பாட்டு வடிவமாகத் தேர்ந்தெடுத்தது போர்ஹெஸின் கதாபாத்திரமாக என்னைத் தொடர்ந்து உணர்ந்ததால்தான் என்றால் யாராவது நம்புவார்களா?

காதலை, அனுபவித்த பேரழகினை, துக்கத்தினை, இசையை, கடவுளை, பெரும் கனவை, எல்லையின்மையினை ஒரே வார்த்தை கவிதையினால் நான் சொல்லக்கூடுமென்றால் அதைப் பிறரும் செய்ய நேரிடும் என்றால் இந்த உலகம்தான் எத்தனை சுபிட்சம் நிறைந்த இடமாக மாறிவிடும்.  மனித குலத்தின் மேல் இன்னும் என்னிடத்தில் அழியாமல் இருக்கும் நன்நம்பிக்கையும் அது சார்ந்த லட்சியவாதத்தினாலும் ஆனதே minimalist poetryஐ நான் தொடர்ந்து எழுத விழைவது.  

தமிழில் நான் இதுவரைக்கும் ஒரே ஒரு ஒரு வார்த்தை கவிதையைத்தான் கண்டுபிடித்திருக்கிறேன். வியக்கத்தக்க காப்பியமான மகாபாரதத்தினை தெருவில் நிகழ்த்தக்கூடிய, சமயாசந்தர்ப்பங்களுக்கு ஏற்ப பெரிய மரியாதையையும், கடும் இளக்காரத்தினையும் ஏற்படுத்தக்கூடிய, தத்துவமாகவும், நிகழ்த்துதலாகவும், சடங்காகவும், நாடகமாகவும், திருவிழாவாகவும், கொண்டாட்டமாகவும், தீமிதியையும், சன்னதத்தையும், புனர் வாழ்வினையும் ஒருங்கே கோரக்கூடிய “கூத்து” என்ற நிகழ்கலை வடிவமே, போர்ஹெஸின் கதாபாத்திரம் தேடிய ஒற்றை வார்த்தை கவிதை.


கூத்து. 

Tuesday, August 5, 2014

The Marriage of Maria Braun (1979) Fassbinder [English Subtitles]




Published on Mar 20, 2013
The Marriage of Maria Braun (German: Die Ehe der Maria Braun) is a 1979 West German film directed by Rainer Werner Fassbinder. The film stars Hanna Schygulla as Maria, whose marriage to the soldier Hermann remained unfulfilled due to World War II and his post-war imprisonment. Maria adapts to the realities of post-war Germany and becomes the wealthy mistress of an industrialist, all the while staying true to her love for Hermann. The film was one of the more successful works of Fassbinder and shaped the image of the New German Cinema in foreign countries. The film is the first in Fassbinder's BRD Trilogy, followed by Veronika Voss and Lola.

Plot:

The film starts in Germany in 1943. During an Allied bombing raid Maria (Hanna Schygulla) marries the soldier Hermann Braun (Klaus Löwitsch). After "half a day and a whole night" together, Hermann returns to the front. Postwar, Maria is told that Hermann has been killed. Maria starts work as a hostess in a bar frequented by American soldiers. She has a relationship with an African-American soldier Bill (George Byrd), who supports her and gives her nylon stockings and cigarettes. She becomes pregnant by Bill.
Hermann, who was not killed, returns home to discover Maria and Bill undressing each other. A fight between Hermann and Bill ensues. When Hermann seems in danger Maria unintentionally kills Bill striking his head with a full bottle. Maria is tried by a military tribune, and expresses her love for both Bill and Hermann - Hermann is so struck with Maria's devotion that he takes the blame for the killing and is imprisoned. Maria likely aborts her pregnancy and asks her doctor promise to maintain the grave. On the train home, Maria catches the eye of a wealthy industrialist, Karl Oswald (Ivan Desny). Oswald, an older man, offers her a position as his assistant, and shortly thereafter Maria becomes his mistress to "maintain the upper hand". Maria visits Hermann again and tells him about the development, promising that their life will start as soon as he is released. Maria becomes wealthy and buys a house.
Oswald visits Hermann and offers to make him and Maria heirs to his wealth if Hermann deserts Maria after his release. Neither man tells Maria of their agreement. On release, Hermann emigrates to Canada and sends Maria a red rose each month to remind her he still loves her. Following Oswald's death Hermann returns to Germany and to Maria. When Oswald's will is read by the executor Senkenberg (Hark Bohm) Maria hears about Oswald's agreement with Hermann. Distressed, Maria lights a cigarette and dies when the gas explodes. She had left the gas knob turned on from lighting a previous cigarette.