![]() |
| மகாராஷ்டிர பைத்தானி சித்ரகதி ஓவியம்- Replica by Balaji Srinivasan |
வால் சுழற்றி
எதிர் குரங்கின்
பிடறி மயிர்
கட்டியிழுத்து
தோள் தட்டி
தொடை தட்டி
சிலிர்த்து நின்றால்
அது யுத்தம்
பற் கடித்து
கண் சிவந்து
நகம் தீட்டி
நா துருத்தி
பூமி அதிர
சமட்டி நின்றால்
அது யுத்தம்
உன் ஆயுதம்
என் ஆயுதம்
உன் உயிர் நிலை
என் உயிர் நிலை
சொல்லி இறங்கினால்
அது யுத்தம்
வானர ராஜன்கள் அஞ்சுவதில்லை
