Showing posts with label metapoem. Show all posts
Showing posts with label metapoem. Show all posts

Tuesday, January 17, 2012

நகுலன் எழுதியிருக்கக்கூடும் இப்படி



நகுலன் எழுதியிருக்கக்கூடும் இப்படி

கருணாநிதியா என்று கேட்டேன்
கருணாநிதிதான் என்றார் அவர்
எந்தக் கருணாநிதி
அவரும் சொல்லவில்லை
நானும் கேட்கவில்லை
என்றாலும்
கருணாநிதியை
கருணாநிதி என்றழைத்தால்
ஆவேசம் கொள்வர் பலர்

Monday, November 7, 2011

வஜ்ரயோகினி




'காண்டபா"- திபெத்திய தாந்த்ரீக ஓவியம்-உயர் நிலை தியானத்திற்குரியது. கீழே உள்ள கவிதை மந்திரமாகும். மெதுவே உச்சாடனம் போல் படிக்க வேண்டியது.audio file இணைப்பு இல்லை.


ரகசியம் அதி ரகசியம்
ரகசியத்திலும் ரகசியம் 
இந்தக் கவிதை

கற்பனை அதி கற்பனை
கற்பனையிலும் கற்பனை
இந்தக் கவிதை

சூட்சுமம் அதி சூட்சுமம்
சூட்சுமத்திலும் சூட்சுமம்
இந்தக் கவிதை

கவிதை