Friday, May 11, 2012

அது

அது

                                                                                                               -ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ்

 

 

 

தனித்த பேரிக்காய் தன் கனிவில்

இன்று காலை பெருத்து கனிய

அதன் தோற்பதம் கரடு முரடாய் சிவந்திருக்க

 

கிளை பரப்பிய மரத்தை விட அதிகமாய் பார்வையின் நுட்பத்தைக் கோர

அலங்காரக் கிளைகள் தொங்கும் ஒரு நூறு பூரண மரங்களைவிட 

 மேலும் நுட்பமாய் கவனத்தைக் கோரியது

 

இருந்தாலும் அந்தக் கனி குறைவுபட்டது; நகக்கீறலின் அடையாளம் உள்ளது

ஒரு பறவையின் அலகினால் கொத்தப்பட்டது

காயத்தின் சிவப்பு

பிறப்புக்குறியின் கிருபையென

ஒரு குடும்ப தோஷமேயென

 

இருப்பினும் அதன் தனித்த எடை ஒரு ஊதுகுழலாய்

பித்தளையை அழைக்க

அதன் கர்வம் மொத்த பழத்தோட்டத்தினும்

பல ஏக்கர் நிறைந்த மரங்களினும்

படையென நிறைந்த ஏணிகளினும்

 வேலையாட்களின் அவ்வபோதான கூச்சல்களினும்

அதி அற்புதமாய்

 

முதல் பேரியின் கனம்

பருவத்தின் மொத்த கொள்ளளவையும் விட மிகுந்தது

மதிப்பீடுகள் அனைத்தையும் விட விலையுயர்ந்தது

ஒரு பரிசு, ஒரு விடுகதை 

ஒரு விருந்து

 

 

 

 

Joyce Carol Oates, "That", in The Nation, vol.225, no.1, July 2, 1977, p.23

 

No comments: