Monday, June 19, 2023

"பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்"• தமிழில்: எம்.டி. முத்துக்குமாரசாமி

"பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்"•
தமிழில்: எம்.டி. முத்துக்குமாரசாமி

*
பாஷோவின் கவிதைகளில் உழைப்புப் பாடல்களை நாகரிகத்தின், கலையின் தோற்றுவாயாகக் கருதும் பார்வை பல இடங்களில் காணப்படுகிறது. அதுபோல் ஆன்மிகத்தில் கனிந்த பார்வை பல சமயங்களில் இயற்கையின் பேரழகு ஏழ்மை நிலையிலிருப்பவர்களுக்கு வசப்படுவதைக் கவனப்படத்துவதாக இருக்கிறது. நிலவு பார்த்தல், செர்ரி பூத்திரள்களைக் காணுதல், காற்றில் அசையும் புற்களைக் கவனித்தல் எனப் பல அழகியல் அனுபவங்கள் ஏழ்மையில் இருப்போருக்கே, நாடோடிகளாய் அலைவோருக்கே, ஏதிலிகளுக்கே பாஷோவின் கவிதைகளில் சாத்தியமாகின்றன. இதனால் பாஷோவின் கனிந்த ஆன்மிக அழகியல் சமூகத்தின் பலவீனர்களின் பொருட்டான அரசியலாகிறது.
- எம்.டி. முத்துக்குமாரசாமி
*
எனக்குத் தனித்திறன் இருக்குமானால்
செர்ரி மெல்லிதழ்கள் விழுவதைப் போல
பாடுவேன்
*
தோட்டத்தில்
ஒரு வியர்வையில் நனைந்த காலணி
சிவந்தியின் மணம்
*
அரிசியைப் புடைத்தவாறே
சிறுமி ஒருக்களிக்கிறாள்
நிலவைக் காண
**
•ஹைக்கூ கவிதைகள் தேர்வு, தொகுப்பு, மொழிபெயர்ப்பு: எம்.டி. முத்துக்குமாரசாமி
•அட்டை: ஜப்பானிய மரச்செதுக்கு ஓவியம்
•வடிவமைப்பு: யுகாந்தன்
•வெளியீடு: தமிழ்வெளி


 

Friday, June 16, 2023

"இந்த முழு பிரபஞ்சத்தையும்விடச் சற்றே பெரியது" -ஃபெர்ணாண்டோ பெசோவா தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

 




கோவை புத்தகக் கண்காட்சி வெளியீடு: 03

- "இந்த முழு பிரபஞ்சத்தையும்விடச் சற்றே பெரியது" - 

•மொழிபெயர்ப்புக் கவிதைகள்•

@ தமிழில்: எம்.டி. முத்துக்குமாரசாமி

*
பெசோவோ அவர் கவிதைகளின் வழியே, பல தன்னிலைகளை நம் கண்முன் வைக்கிறார். அதை உள்வாங்கிய நாமோ எந்தப் பக்கமும் செல்லமுடியாமல் திகைத்து நிற்கிறோம். உளப் பகுப்பாய்வில் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை 'கவுன்டர் ட்ரான்ஸ்பரன்ஸ்' - Counter Transference. இதை வாசகர் அனுபவம் என்றும் புரிந்துகொள்ளலாம்.
- ஜெயப்ரகாஷ் ராஜேந்திரன் (ஜேபி)
**

•அட்டை ஓவியம்: சி. டக்ளஸ்

•வடிவமைப்பு: யுகாந்தன்

•அணிந்துரை: ஜெயப்பிரகாஷ் ராஜேந்திரன் (ஜேபி)

•வெளியீடு: தமிழ்வெளி

Tuesday, June 13, 2023

நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்- மஹ்மூத் தர்வீஷ்- தமிழில் : எம்.டி.முத்துக்குமாரசாமி

 

விரைவில்...
கோவை புத்தகக் கண்காட்சி வெளியீடு: 01

"நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்?"
| மொழிபெயர்ப்புக் கவிதைகள் |

@ மஹ்மூத் தர்வீஷ்

தமிழில்: எம்.டி. முத்துக்குமாரசாமி

*
நட்சத்திரங்களுக்கு எந்தப் பங்குமில்லை 
எனக்கு வாசிக்கச் 
சொல்லித் தந்ததைத் தவிர 
ஆகாயத்தில் எனக்கொரு மொழி இருக்கிறது 
பூமியிலும் எனக்கொரு மொழி இருக்கிறது 
நான் யார்? 
நான் யார்? 
* 
கவிதை என்பது இங்கேயும் அங்கேயும் இல்லாமல் இடைநின்று 
இரவுகளைப் பெண்ணின் மார்புகளால் ஒளியூட்டுவது 
ஒரு ஆப்பிளின் இரு உடல்களை ஒளியூட்டுவது 
வாசனை நிரம்பிய பூக்களையுடைய கார்டேனியா மரத்தின் கூவல் போல 
தாய்நாட்டைத் திரும்பக்கொண்டு வருவது 
* 
என் முன்னால் இருக்கும் கவிதை 
பழங்கதையின் தாதுக்களை என் கையால் நகர வைக்கக்கூடியது 
ஆனால் நான் 
கவிதையைக் கண்டடைந்த மாத்திரம் என்னிடமிருந்து என்னை நாடு கடத்திக்கொண்டேன் 
அதனிடம் கேட்டேன் 
நான் யார்? 
நான் யார்? 
- மஹ்மூத் தர்வீஷ்
** 

•அணிந்துரை: ஜமாலன்

•அட்டை: றாஷ்மி

•வடிவமைப்பு: யுகாந்தன்

•வெளியீடு: தமிழ்வெளி