Wednesday, November 14, 2012

பிடித்ததை சாக்கிட்டு ஒரு விளக்கம்


இன்று தற்செயலாய் ஆம்னிபஸ் வலைத்தளத்தில் நட்பாஸ் எழுதிய கடைசி குயிலின் கானம் என்ற கட்டுரையை வாசித்தேன்; பறவைகள், மனிதன், பண்பாடு ஆகியவற்றுக்குள்ள உறவுகளை பதிவு செய்வது, எழுதுவது பற்றிய கட்டுரை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

நட்பாஸின் கட்டுரையில்  ஜெயமோகனின் ‘குருகு’, கட்டுரைக்கும், அருணாசலபிரதேசத்தில் இருவாட்சிகளைப் பார்ப்பதற்காக  அங்கமி நாகர் இனத்தைச் சேர்ந்த மூப்பர் ரீபாங்குடன் நான் பயணம் செய்ததைப் பற்றிய கட்டுரைகளுக்கும் சுட்டிகள் இருந்தன. என்னுடைய கட்டுரைகளை நிறைவடையாத கட்டுரைகள் என்று நட்பாஸ் குறிப்பிட்டிருந்ததைப் பற்றியே இந்த விளக்கம்.

ஆமாம் அக்கட்டுரைத் தொடர் முடிவடையவில்லை. இருவாட்சிகள் சார்ந்த சில சடங்குகளைப் பற்றி எழுத ரீபாங்கிடமும் வேறு சில பழங்குடி மூப்பர்களிடமும் அனுமதி கோரியிருந்தேன். அவர்களிடமிருந்து அனுமதி வர தாமதமானதால் தொடரும் தாமதமானது நானும் வேறு வேலைகளில் ஆழ்ந்துவிட்டேன். அந்தக் கட்டுரைத் தொடர் வேறு பரந்த தத்துவக் கேள்விகளுக்கான சட்டகத்தின் கீழ் இருவாட்சிகளுக்கும் பழங்குடி பண்பாட்டிற்குமுள்ள உறவினை உதாரணமாக முன்னிறுத்துவது; அந்த விவாத முனைக்கு கட்டுரைத் தொடர் இன்னும் வந்து சேரவில்லை. நட்பாஸின் கட்டுரையைப் படித்தவுடன் என் கட்டுரைகளைத் தொடர்வதற்கான உத்வேகம் கிடைத்தது. கூடிய விரைவில் தொடர்கிறேன். நட்பாஸுக்கு நன்றி. 

1 comment:

நட்பாஸ் said...

கொஞ்சம் ஓவராகப் போகிறேனோ என்ற சந்தேகத்துடன்தான் எழுதினேன், தவறாக எடுத்துக் கொள்ளாமைக்கு நன்றிகள்.

இருவாட்சி கட்டுரைகளை வாசகர்களாகிய நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம், மீண்டும் நன்றிகள்.