“ஜெயமோகன் என் மீது சுமத்தியுள்ள அவதூறுகள் ஒருபுறம் இருக்கட்டும், இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்படுகிற மக்களின் விடுதலைக்கான ஓளிவிளக்குகளாக உள்ள மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் ஆகியோரைக் காமுகர்களாக ஜெயமோகன் சித்தரித்த போது வாய் மூடி இருந்துவிட்டு இப்போது எழுத்தில் கடைப்பிடிக்க வேண்டிய அறம் குறித்து மாய அழுகை அழுகின்றவர்கள் எனக்காகக் குரல் கொடுக்கவில்லை. விதிவிலக்காக ஓரிரு எழுத்தாளர்கள் இருந்தனர் என்பதை நான் மகிழ்ச்சியோடு பதிவு செய்கிறேன். நான் வேலை பார்த்த நிறுவனம் நடத்திய கருத்தரங்குகள், சிறப்புக் கருத்துரைகள் ஆகியவற்றில் பங்கேற்றவர்களும் ஜெயமோகனால் புகழப்பட்டவர்களுமான கோவை ஞானி, எஸ்.என். நாகராஜன், வே.ஆனைமுத்து ஆகியோரும்கூட வாய் திறக்கவில்லை.” என்று எழுதும் எஸ்.வி.ராஜதுரையின் ஜெயமோகனுக்கு எதிரான கட்டுரை “தேசபக்தியும் தேசதுரோகமும்” என்ற தலைப்பில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் வலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது. அந்தக் கட்டுரைக்கான சுட்டி இதோ
http://aadhavanvisai.blogspot.in/2012/11/blog-post.html படித்துப் பாருங்கள்.
அவதூறுகளைப் பரப்புவதையும் அதனால் கிடைக்கின்ற வக்கீல் நோட்டீசுகளை வைத்து அழுகினி டிராமா போடுவதையும் ஜெயமோகன் நிறுத்திவிட்டு எஸ்.வி.ராஜதுரையின் புத்தகங்கள் முன் வைக்கின்ற கருத்துக்களை நேர்மையாக விவாதிக்க முன்வரவேண்டும்.

No comments:
Post a Comment