Wednesday, February 22, 2012

கை நீட்டம்மா கை நீட்டு: மாமல்லனின் அவதூறும் உள்நோக்கமும்


நான் வேலைபார்க்கும் தேசிய நாட்டுப்புறவியல் மையம் 1997ஆம் ஆண்டிலிருந்து சென்னையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக டாடா அறக்கட்டளை நிதி நிறுவனத்தின் உதவியோடு செயல்படுத்திவரும் பல திட்டங்களில் ஒன்று நரிக்குறவர்களுக்கான பண்பாட்டு ஆவணக்காப்பகம் அமைப்பது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் போன ஆண்டு செப்டம்பர் மாதத்தோடு நிறைவு பெற்றுவிட்டன. 
என் மேலுள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக விமலாதித்த மாமல்லன் என்ற நரசிம்மன் என்ற கலால் வரித்துறை இன்ஸ்பெக்டர் தொடர்ந்து பொய் பொய்யாய் எழுதி, என்னை மிரட்டியும், நான் வேலை பார்க்கும் நிறுவனத்தைப் பற்றி அவதூறும் செய்து வருகிறார். அவருடைய சமீபத்திய அவதூறு அவருடைய வலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது. 
இந்தப் பதிவினை அவதூறு என்று நான் சொல்வதற்கான காரனங்கள் மூன்று:
  1. மாமல்லன் ஏதோ  குழந்தை விளையாட்டுக்களை ஆவணப்படுத்த  மாணவ மாணவிகள் ஒரு முறை சென்று வந்தது போலவும் அதற்காகவே டாடாவின் நிதி முழுக்க பயன்படுத்தப்பட்டது போலவும்  எழுதியிருக்கிறார். எங்கள் நிறுவனம் நரிக்குறவர் -வாக்ரி சமூகத்தினர் ஆராய்ச்சி தொடர்பாக இதுவரை நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ளது. இந்த புத்தகங்கள் தவிர முழுமையான audio visual ஆவணக் காப்பகம் உருவாகியிருக்கிறது. புத்தகங்களின் அட்டைகளை கீழே தருகிறேன். இந்தப் புத்தகங்களில் நரிக்குறவர்- வாக்ரி சமூகத்தினருக்கான வாக்ரி மொழி அகராதி வெளிவந்திருப்பது மாமல்லனுக்கு நன்றாகத் தெரியும். இந்த அகராதியினால் என்ன பயன் என்று அவர் கேட்டு இதே போல ஒரு அவதூறு பதிவு எழுதியதும் அதற்கு நான் ஏற்கனவே பதில் எழுதியதும் இங்கே காணலாம்: http://mdmuthukumaraswamy.blogspot.in/#!http://mdmuthukumaraswamy.blogspot.com/2011/12/blog-post_24.html இருப்பினும் ஏதோ மாணவ மாணவியரின் களப்பணி slide show மட்டுமேதான் நடந்த வேலை என்று எழுதியிருப்பது  என்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற அவரது உள் நோக்கத்தினையே வெளிப்படுத்துகிறது.  1. மாமல்லன் சொல்வது போல நரிக்குறவர் திட்டம் மட்டும் டாடா நிதியினால் செயல்படுத்தப்படவில்லை; ஜேனுகுறுபர், செரைக்கெலா சாவ் நடனம், ஆகியனவுக்கும் ஆவணக் காப்பகங்கள் அமைக்கவும், வடகிழக்கு மாநிலங்களுக்கான ஸ்காலர்ஷிப் வழங்கவும்  செலவழிக்கப்பட்டது. இதுவும் மாமல்லனுக்குத் தெரியும். இருந்தும் அவர் இவ்வாறு ஜோடிப்பதற்குக் காரணம் என்ன? 
  1. தேசிய நாட்டுப்புறவியல் மையத்தின் திட்டங்கள் வல்லுனர்களாலும், துறை அறிஞர்களாலும், நிறுவனத்தின் உயர் நிர்வாகிகளாலும் தொடர்ந்து மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் யுனெஸ்கோ தேசிய நாட்டுப்புறவியல் மையத்தின் ஆவணக்காப்பக அமைப்புத் திட்டங்கள் உலகின் தலைசிறந்த கலாச்சார பாதுகாப்பு முறைகளுள் கவனிக்கத்தக்கவை என்று பிரசுரம் (பக்கம் 110) வெளியிட்டுள்ளது. இந்த உண்மையும் மாமல்லனுக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் இப்படி பதிவு எழுதுவதன் அவசியம் என்ன?
தொடர்ந்து நான் வேலை பார்க்கும் நிறுவனத்தினைப் பற்றி பொய்யும் அவதூறும் எழுதி அதன் மூலம் என்னை சிறுமைப்படுத்தி, அவமானப்படுத்தி, முடிந்தால் என் வேலையை விட்டு என்னை தூக்கி, முடியாவிட்டால் என்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி என்னிடமிருந்து பணம் பறிக்க விமலாதித்த மாமல்லன் என்ற நரசிம்மன் ஆகிய கலால் வரித் துறை இன்ஸ்பெக்டர் முயற்சிக்கிறார் என்று சந்தேகிக்கிறேன். 


Post a Comment