ஒவ்வொரு துறையைப் பற்றியும், நிறுவன வகைகளைப் பற்றியும் விமர்சனங்கள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. கலால் வரித் துறை ஊழல்கள் பற்றி corruption monitor என்ற வெப்சைட்டில் விரிவான அறிக்கை வெளியாகியிருக்கிறது. பார்க்க: http://corruptionmonitor.com/indiataxcorruption.html இந்த அறிக்கை தன்னுடைய இந்திய ஆங்கிலத்தில்
"It was experienced that it is very difficult to be honest and forthright in a revenue Department like ours because the system itself corrupt persons with the well balanced mentality as it will be very difficult to refuse repeatedly offer of money just for the existence in the Department as Officers indirectly which are not to perform duties."என்று எழுதியிருக்கிறது. இந்த வெப்சைட்டில் கலால் வரித்துறையில் வேலை பார்ப்பவர்கள் யாருமே நேர்மையாக இருக்கமுடியாது என்று எழுதியிருப்பதால் இப்போது கலால் வரித் துறையில் வேலை பார்க்கும் விமலாதித்த மாமல்லன் ஆகிய நரசிம்மனும் நேர்மையற்றவர், ஊழல் பெருச்சாளி என்று கூறமுடியுமா? அப்படி சொல்வது போன்றதுதான் NGO நிறுவனங்கள் பற்றி விமர்சனங்கள் இருக்கின்றன என்பதற்காக அத்தனை நிறுவனங்களையும் அவற்றில் வேலை பார்ப்பவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்த பார்வைக்கு மாமல்லன் உட்படுத்துவதாக சூசகம் எழுதுவதும்.
அப்படியெல்லாம் இல்லை சமூக் கடமையினால் (!) விமர்சிக்கிறேன் என்றால் பாபா ஆம்தேயின் தொண்டு நிறுவனத்திற்கு மாமல்லன் கொடுத்திருக்கும் சுட்டியிலுள்ள NGO பற்றிய ஆய்வுரை எப்படிப்பொருந்தும் என்று மாமல்லன் விளக்கிச் சொல்லலாம்.
மாணவ மாணவியரின் நரிக்குறவர் குழந்தைகள் விளையாட்டு Documentation உண்மையில்லை என்று சொல்லும் மாமல்லன் எந்த ஆதாரத்தில் சொல்கிறார்? மாணவர்களின் களப்பணிக்கு NFSC எந்தவகையிலும் பணம் செலவழிக்கவில்லை. பின் எப்படி டாடாவுக்கு கணக்கு கொடுத்ததாய் எழுதுகிறார்?
மாமல்லனின் நோக்கம் அவதூறு செய்வதும் அதன் மூலம் ஆதாயம் தேடுவதும்தான்.
No comments:
Post a Comment