மு வுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே ஊரிலிருந்து ஃபோன் வந்து விட்டது.
“ மக்கா! இருக்கியா?!”
“இருக்கேங்”
“என்ன அணக்கத்தையே காணோம், நானும் நாலஞ்சி வாட்டி கூப்டேன் பீப் பீப்புன்னு சத்தந்தானடே வருகு?”
“வேல ஜாஸ்தி. ஃபோனுக்கு டாப் அப் பண்ணல”
“கனெக்சன் புடுங்கிட்டானா? புக்கு என்ன ஆச்சு?”
“எந்த புக்கு?”
“அதாண்டே ‘உங்களுக்கு ஒரு மாதிரி இருக்கிறதா?’”
“வோ அதுவா, சவத்து மூதிய விட்டுத் தள்ளுங்க”
“ஹே நல்ல டைட்டில்லா இப்டி விட்லாமா? ஆரோ ஒரு பியூனு காசு புடுங்கப் பாக்கான்னியே அதனாலியா?”
“எந்தப் பியூனு?”
“அதாம்பா அந்த எட்டாங்கிளாஸ் தோத்த பய”
“வோ, அவனா? நாந் தப்பா சொல்லிட்டேன் அவன் பழைய எஸ்ஸெஸ்ஸி பாசாம். சர்டிஃபிகேட்லாம் இருக்காம்”
“பொய் பொய்யாட்டு சொல்லி குண்டில கரண்டு கம்பிய வச்ச மாரில்லா துள்ளுகான் அப்டின்ன”
“இன்னும் துள்ளிகிட்டுதான் கிடக்காங்”
“ என்ன சொல்லுகாங்?”
“ முன்னால என் கோமணம் துவைச்சான்னு சொன்னானில்லையா”
“சொன்னானா! அப்டியா! நீ இன்னும் கோமணமாடே கட்டுக?”
“அவன் கட்டுகாங் போலுக்கு அதனால நானுங் கட்டுகேங்கான்”
“ சரி, நல்லா கசக்கி பிழிஞ்சு துவைச்சானா?”
“அப்டிதாங் சொன்னாங்”
“ நல்லா துவைக்க தொழிலு பாப்பானோ?”
‘இல்ல இலக்கிய விமர்சனமாம்”
“எது?’
“கோமணங் கசக்ககு”
“வோ”
“இப்போ ஆர் ஆரு ஒளுங்கா கழுகுதான்னு பாக்கானாம்”
“அய்யே! இது என்னவாம்?”
“இது சமூக விமர்சனமாம்”
“எது? ஒவ்வொருத்தனயா மோந்து மோந்து பாக்கதா?”
“அப்டிதாங் சொல்லுகாங்”
“ஒரு பாடு கஷ்டம் உண்டும்”
“ஆருக்கு?’
“அவன் மூக்குக்குத்தாந்”
“வோ”
“கிடக்காங் மயிராண்டின்னு விடுடே. சோலியப் பாப்பியா”
“அப்டிதான் எல்லாருஞ் சொல்லுதாக. ஆனா நாந்தான்…”
“வேப்பில அடிச்சு பாக்கியாக்கும்? இதெல்லாம் தேறாத கேசுடே. நம்ம பண்டாரவிளை நாடார்கிட்ட கூட்டுப்போவோமா?”
“எதுக்கு?”
“சில சமயம் சுளுக்கெடுத்துவிட்டா மெண்டெலு சரியாகிடும் பாத்துக்க”
“சொன்னா ஒருபாடு கூப்பாடு போடுவானே. கூடவே கும்மியடிக்கக் குட்டிப் பிசாசுக் கூட்டம் வேற இருக்கு பாத்துகிடுங்க”
“ நம்ம தெக்கூட்டுப் பயல் கிடந்தானில்லையா, அவனெ இப்படித்தான் கெட்ட ஆவி பிடிச்சு ஆட்டிச்சு பாத்துக்க. ஓன் ஆளு மாரியே நாக்க துருத்துகான், கண்ண உருட்டுகான், காஞ்சனா பட ராகவேந்திரா லாரண்ஸ் கணக்கா பல்ல கடகடன்னு நெறிக்கான், கடிக்கான். துண்ணூரு போட்டு பாத்தது, உடுக்கடிச்சு பாத்துச்சு…”
“ம்ஹ்ம், அப்றம்”
“உடுக்கடிக்கு டிரம்முன்னா டிரம்மு எம்ட்டி டிரம்முன்னு பதிலுக்கு ஆடுகான் பாத்துக்க”
‘ம்ஹ்ம்”
“அற்புத ஆவி எளுப்புதல் கூட்டத்துக்குபோய்தான் சரியாச்சு”
“வோ”
“ஒன் ஆளும் வார்த்த பேசுகானில்லையா”
“பின்னெ, அதில் அவன் ஸ்பெஷலிஸ்டாக்கும்”
“கட்டு விரியன் பாம்புகளே மனந்திரும்புங்கள் சுவிசேஷ ஜெபம் இருக்கில்லா அத ஓதிப் பாரேன்”
“ப்ச்சு. சும்மாவே காண்ட்டுன்னா கண்ட்டுங்கான், தெரிதான்னா தெர்தாங்கான், இதுல சுவிசேஷம் வேறயா”
“வலுத்த கேசாட்டுல்லா இருக்கு. வேற வழியேஇல்ல. பேய பேயேதான் சொஸ்தப்படுத்தும் பாத்துக்க. காஞ்சனா படமிருக்கில்லா அதயே பத்து தடவ பாத்து அது மாரியே ஆடச் சொல்லு. எல்லாஞ் செரியாயிடும். சேசுவுக்குத் தோத்திரம். வைக்கட்டா”
“சரி”