Monday, October 17, 2011

ஜான் கேஜ்: இசையும் மௌனமும்


ஜான் கேஜின் இசையையே நான் விரும்பி விரும்பி கேட்கிறேன். காட்சிப்படிமங்களை விட இசையே ஆழ்நிலை அமைதியை அனுபவமாக வடிவமைக்கவல்லது. ஜான் கேஜ் இசைக்குள் பொதிந்திருக்கும் மௌனத்தை கேட்பவனே இசையை அனுபவிக்கிறான் என்று பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.
ஜான் கேஜின் இசையை நான் ஒரு ஒழுங்கில் கேட்பேன். அந்த ஒழுங்கினை உங்களோடு இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 

முதலில் அவருடைய கனவு என்ற காம்போசிஷன். அதை இந்தச் சுட்டியில் கேளுங்கள்.

கடைசியாக வரும் கைதட்டலுக்கு முன்பாகவே அதை விட்டுவிட்டு கனவுக்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலையில் இந்த கற்பித நிலப்பகுதிக்குள் நுழையுங்கள்.

இந்த கற்பித நிலப்பகுதியில் உங்களுக்கு இரண்டு தேர்வுகள் இருக்கின்றன ஒன்று நீங்கள் இங்கே இந்த நிலப்பகுதியில் ஒன்று இந்த ஆறு கானங்களைக் கேட்கலாம் 
அல்லது பாரதியின் நிற்பதுவே நடப்பதுவே பாடலைக் கேட்கலாம். 


இரண்டுமே என்னைப்பொறுத்தவரை ஒரே அனுபவங்கள்தான்.
அடுத்து வரக்கூடிய ஜான் கேஜின் இசையை நான்கு நிமிடங்களும் முப்பத்தி மூன்று விநாடிகளும் விடாமல் 

கேட்டுவிட்டீர்களென்றால் நீங்கள் பெரிய சாதனையாளர்தான்.

இனி சப்தங்களின் சமுத்திரத்தைக்கேட்கலாம்.

இந்த உலகத்திற்கு மீண்டும் உங்கள் வரவு நல் வரவாகுக. இன்று உங்கள் இசைத்தொகுப்பாளனாக இருந்தது என் பாக்கியம்.

3 comments:

ROSAVASANTH said...

எல்லாவற்றிற்கும் நன்றி. ஆனால் யூடியூபில் கேட்க கிடைக்கும் நிற்பதுவே நடப்பதுவே'வை பாரதியின் பாடல் என்று மட்டும் சொன்னதுதான் புண்படுத்துகிறது.

mdmuthukumaraswamy said...

ஜான் கேஜ் இசையின் conductors பெயர்கூட சொல்லவில்லையே. அவையெல்லம்தான் யூ டூபில்தான் கொடுத்திருக்கிறார்களே. பண்டைய கிரேக்க இசை கேஜிடம் hybrid தன்மை பெறுகிறது. கிரேக்க இசை தமிழ் திணை இசை போல நிலம் சார்ந்து பாகுபடுத்தப்படுவது. பாரதியின் பாடல் வரிகளோ கேஜின் ஆறு கானங்களோ 4.33ஐக் 'கேட்கும்போதும்' ஒலித்துக் கொண்டேயிருக்கும். திரும்ப வருதலின் கணங்களே கலை, இலக்கிய தருணங்கள்

ROSAVASANTH said...

/ஜான் கேஜ் இசையின் conductors பெயர்கூட சொல்லவில்லையே./

'நிற்பதுவே நடப்பதுவே' பாடலை ' படைத்தவர் இளையராஜா (பாரதியின் வரிகள் அதற்கு பயன்பட்டது) என்று நான் நினைக்கிறேன். நீங்கள் பாரதி அதை உருவாக்கினார், இளையராஜா அதற்கான conductor மட்டுமே என்று நினைப்பதாக, மேலே உள்ள வாக்கியம் பொருள்படுவதாக எனக்கு தோன்றுகிறது. என் சிற்றறிவால் அப்படி நினைக்க முடியவில்லை; ஆர்வமிகுதியில் புண்பட்டுவிட்டேன்.