தமிழ்நாட்டு தோல் பாவை 'பாடகி' |
ரேழியில் ஒரு
பாவை பாடியது
குடமே
பனிக்குடமே
நற்குடமே
பொற்குடமே
இலையே
சிற்றிலையே
(முதுகு நோவ)
இன்று முற்றும்
இருந்திளைத்த சிற்றிலையே*
குயிலே
சிறுங் குயிலே
கருங் குயிலே
கூவுமென் கருங்குயிலே
சங்கே
நற்சங்கே
வெண் சங்கே
கோலப்பெருஞ் சங்கே
குடம் ஆறாகவே
இலை காடாகவே
குயில் வான் ஆகவே
சங்கு கடலாகவே
கொங்கைக்
குங்குமம்
தான் அழியவே
அருள்வாய்
தருவாய்
நிறைவாய்
--------------------------------------
* ஆண்டாள்
4 comments:
புன்னகைக்க வைத்தது :)
Beautiful !! real fun to just read it.
choodagam
tholvalai
thodu
sedvippoo
padagam
perum parai
kola vilakku
kodi
vidhanam
ukkam
thattoli
kaanam serndhu
koodi irundhu
kulindhaval polum.... :)
சூடகம்
தோள் வளை
தோடு
செவிப்பூ
பாடகம்
சங்கம்
பெரும் பறை
கோல விளக்கு
கொடி
விதானம்
உக்கம்
தட்டொளி
கானம் சேர்ந்து
கூடி இருந்து
குளிர்ந்தவள் போலும் .... :)
Balaji Srinivasan
Post a Comment