ராஜஸ்தான் வாய்மொழி காப்பியமான பாபுஜி திரைச்சீலை ஓவியத்தின் ஒரு சிறு பகுதி |
நாற்படை திரண்டது
ஓகோ
சங்கு முழங்கியது
ஆகா
முரசு அதிர்ந்தது
ம்ஹ்ம்
இயமரம் இரட்டின
ஓகோ
கொம்பு ஒலித்தன
ஆகா
குடை நிழற்றின
ம்ஹ்ம்
பிணங்கள் விழுந்தன
ஓகோ
பேய்கள் ஆடின
ஆகா
கதறி அழுதனர்
ம்ஹ்ம்
பிணங்கள் விழுந்தன
ஓகோ
பேய்கள் ஆடின
ஆகா
கதறி அழுதனர்
ம்ஹ்ம்
கொடி விளங்கின
ஓகோ
குதிரை கனைத்தது
ஆகா
தமையன் ஏறினான்
ம்ஹ்ம்
தம்பி குதித்தான்
ஓகோ
இடறி விழுந்தனன்
ஆகா
நாண்டு செத்தனன்
ம்ஹ்ம்
தூக்கி போட்டனர்
ஓகோ
காறி உமிழ்ந்தனர்
ஆகா
மறந்து போயினர்
ம்ஹ்ம்
-----------------------------------------------------------------------------------------------------------------
* காளிக்கு கூளி கூறியது பரணி இலக்கியத்தில் ஒரு வடிவக்கூறு
2 comments:
காலச் சுழற்சியில் கரைந்த காவியம் !!!!
First class arts magazine போல இருக்கிறது உங்கள் blog. அழகான கவிதைகள், பிரமாதமான ஓவியங்கள், சிறப்பான கட்டுரைகள். உங்களுக்கு என் நன்றிகள். ராகவ்
Post a Comment