ஒரிசா மாநில பாதசித்ரா ஓவியம்: பாம்பு மாலை அணிந்த பூரி ஜெகந்நாதர்( கவிதைக்கு பொருத்தமில்லாத ஓவியம். சும்மா) |
இரட்டைப் பாம்புகள்
பின்னி நிற்கும் என்
மன விதானமெங்கும்
ஒற்றைத் தலையாய்
இரு உடல் கூடுமிடும்
தொடு வானமெனவே
வசீகரிக்க
இரு உடல் பின்னும்
கணம் தோறும்
உயிரிசை வெளியாய்
விரியும் என்னுலகில்
கடல் நோக்கும்
ஒரு பாம்பின்
உடல் தரிக்கும்
பாம்புப் பாடகன்
நான் என்றாலும்
என்னிடத்திலில்லை மகுடி
ஊதும் உன் ஜீவ மூச்சு
1 comment:
கருத்தினால் இருத்தியே
கபாலம் ஏற்ற வல்லிரேல்
கணத்தினில் புலப்படும்
பட அரவும்
அதன் மேல்
நட்டம் பயின்ற
நாரணனும்
Post a Comment