பகரியா ஹிமாசல பிரதேச மினியேச்சர் ஓவியம் 'சிவக் குடும்பம்' |
ஆடி அலுத்துவிட்டது குஞ்சிதபாதனுக்கு
ஓடும் நட்சத்திர ஆறுகள்
எல்லையற்று விரியும் வெளி
விழுங்கும் கரும்புள்ளிகள்
உருவாகும் பிரபஞ்சங்கள்
அலுத்துவிட்டது ஐயனுக்கும் அம்மைக்கும்
வெற்றாக ஆடி ஆடி.
பூத கணங்களை ஆடுங்களென
விட்டுவிட்டு
பையொன்றைத் தோளில்
மாட்டிக்கொண்டு
குழந்தைகளைக்
கூட்டிக்கொண்டு
காட்டிற்குச் சென்றார்
இன்பச் சுற்றுலா
முன்பு உரித்த
யானைத்தோல் விரித்து
அம்மையும் அப்பனும்
உட்கார்ந்து சமைக்க
குழந்தைகள் விளையாட
காளையும் புலியும்
கொஞ்சிக் குலாவ
அக்கடா என்றிருந்தார்கள்
பூமியின் அரவணைப்பில்
No comments:
Post a Comment