காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் சுவரோவியம் புகைப்படம்: பாலாஜி ஶ்ரீனிவாசன் |
ரதி
உடல்களால் உருவம் சமைக்கும்
உத்திகள் சிலவுண்டு
என்னிடம்
நடனமல்ல
பிம்பமல்ல
நினைவின் அடுக்குகளால்
தொகுத்தால்
யானையாகும் சில
சாயல்களின் சேர்க்கையை
ஆசையென்றால்
குதிரையாகும் பல
இன்றைக்கே இப்போதே
இக்கணமே எனில்
சிதிலமே கூடும்
எனினும் காமபந்தம் வாழ்வுடைத்து.
No comments:
Post a Comment