Monday, November 14, 2011

போக பிம்பம் நமீதா




அசினுக்கு உளுந்தங்களி கிண்டி போட்டாயிற்றா என்று கேட்டு வந்துள்ள கடிதம் உட்பட அசின் கட்டுரைக்கு வந்துள்ள பல எதிர்வினைகள் என் பிம்ப ஆய்வு முறையை சரியாக உள்வாங்கிகொள்ளவில்லையாதலால் இந்தக் கட்டுரைக்குள் நுழைவதற்கு முன் என் முறைமையை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் அசினுக்கோ நமீதாவுக்கோ ரசிகனல்ல. நான் அவர்களின் பிம்பங்கள் நம்மோடு எப்படி உறவாடுகின்றன என்றுதான் எழுதுகிறேன். தமிழ் வியாபார சினிமா என்பது பிம்பத் துய்ப்பின் மூலம் பெறப்படும் இன்பங்களின் உற்பத்தி எந்திரம். பிம்பங்களின் ஆய்வு மூலம் நம் ஆசைகளின் உட்கட்டுமானங்களை அறிகிறோமே அன்றி பிம்பங்களின் உரிமையாளர்களையோ, பிம்பங்களின் செயற்கை காம உறுப்புக்களையோ அல்ல. ஹா நான் அந்த பென் பிம்பத்தைப் பார்த்து சொக்கிவிட்டேன் மயங்கிவிட்டேன் என்று எழுதினேன் என்றால் அந்த பிம்பம் ஏற்படுத்தும் தாக்கத்தினை நான் எழுத்தில் பாவனை செய்கிறேன், நிகழ்த்திக் காட்டுகிறேன் என்று வாசித்தால் நல்லது.

இன்னும் இரண்டு சுற்று பெருத்தால் ஷகீலா இன்னும் இரண்டு சுற்று இளைத்தால் நயனதாரா என்று கஷ்குமுஷ்கு என்றிருக்கும் நமீதா பெண் பிம்பம் நம் காலத்தின் போக பிம்பம் ஆனதெப்படி என்பது வரலாற்று ஆராய்ச்சிக்குரியதாகும். நாயக்கர் கால கோவில் சிற்பங்களிலேயே நாம் பருத்த தனங்களோடு கூடிய இடை விரிந்த கொழுக் மொழுக் பெண் சிலைகளைப் பார்க்கிறோம். அதற்கு முந்தைய சோழர் கால பல்லவர் கால கோவில்களிலுள்ள பெண் சிலைகளில் முலைகளின் வளப்பத்திற்குக் குறைவில்லையென்றாலும் அவை கூரிய நாசியையும், மெல்லிய உதடுகளையும், கொடி இடையையும் உடைய ஒல்லிக்குச்சி பெண் சிற்பங்கள். நாயக்கர் கால சிற்பங்களுக்கு அடுத்தபடியாக பருத்த முலைகளும் செழித்த தொடைகளும் கூம்பிய தலையும் உடைய பெண் சுடு மணற் சிற்பங்களை தாய்த் தெய்வ வழிபாட்டிலேயே நாம் பார்க்கிறோம்.  நிலம், நாடு, குடும்பம், விவசாயம் ஆகியவற்றின் வளமை குறியீடாக வழிபடப்படும் பெண் பிரதிமைகள் அவை. கடுமையான பஞ்சங்கள் பல கண்ட நம் வரலாற்றில் தாட்டியான பெண் பிம்பம் அழகானதாகவும், வசீகரமானதாகவும் செல்வத்தின் குறியீடாகவும் பல தலைமுறைகளாக நிலை பெற்றுவிட்டது.

தமிழ் சினிமாவின் ஆரம்பகட்டங்களிலிருந்து தாட்டியான சதைப்பற்று அதிகமுள்ள பெண்பிம்பங்களே கதாநாயகி பிம்பங்களாக இருந்து வந்திருக்கின்றன. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் ராணா பிரதாப் சிங் போன்ற சரிந்த தொப்பைக் கதாநாயகர்களுக்கு ஏற்ப சதைப் பற்றுள்ள கதாநாயகி பிம்பங்களே மையத் திரையை ஆக்கிரமித்திருந்தன. எழுபதுகளின் இறுதியில் எண்பதுகளில் இந்த நிலைமை மாறி  அடுத்த வீட்டுப் பெண்ணைப் போன்ற தோற்றமுடைய சாதாரண பெண் பிம்பங்கள் கதாநாயகி பிம்பங்களாயின. இந்த சாதாரண பெண் பிம்பங்களுக்கு எதிரிடையான கள்ள இன்பத்தை ஊக்குவிப்பனவாக குண்டு பெண் பிம்பங்கள் தமிழ்த் திரையில் இடம் பெற்றன. தீபா என்ற பெண் பிம்பம் இந்தப் போக்கின் மெல்லிய வடிவமென்றால் ஜெயபாரதி, ஜெயமாலினி ஆகிய பெண் பிம்பங்கள் கடின வடிவங்களாகும். தென்னிந்திய சினிமாப்படங்களில் இந்த பிம்பங்கள் மழையில் நனைந்தபடியே வாத்து அல்லது ஆடு மேய்க்கும் காட்சிகள் மிகவும் புகழ் பெற்றவை. ரவிக்கை இல்லாமல் வாத்து மேய்த்தது போக குட்டைப்பாவாடை மார்க்கச்சை மட்டும் அணிந்து இந்தப் பெண்பிம்பங்கள் பேய்களாய் ஆடியதைப் பார்த்து தென்னிந்தியாவே கலகலத்துப்போயிற்று.


மேற்சொன்ன பெண் பிம்பங்களின் வம்சாவழியிலேயே நமீதாவின் பிம்பமும் போகப்பொருளாயிருக்கிறது.  நமீதா பிம்பத்தோடு நேரடியான இன்பத் துய்ப்பு உறவினை பார்வையாளர்களுக்கு இதுவரை வந்துள்ள திரைப்படங்கள் தரவில்லை; மாறாக கள்ள இன்பத் துய்ப்பினையே அவை ஊக்குவிக்கின்றன.

பங்கேற்போரிடையே நட்பு, பரஸ்பர இசைவு, பரஸ்பர மரியாதை, நேரடித் தன்மை, துய்ப்பினை மறுப்பதற்கான உரிமை, கடப்பாடு ஆகியன இல்லாத இன்பத் துய்ப்பு உறவுகள் அனைத்தும் கள்ளத் துய்ப்புகளே. கள்ளத் துய்ப்புகளின் சித்தரிப்புகளும் காட்சிகளும் அவற்றில் பங்கேற்போரை வெற்று சதைக் கோளங்களாகக் குறுக்குகின்றன.

கள்ள துய்ப்பு காட்சிகள் மட்டுமே நிறைந்த படமாக சமீபத்தில் வெளிவந்த கன்னட நமீதா படத்தினை இங்கே உதாரணமாகக் குறிப்பிடலாம். இந்தக் கன்னடப் படத்தில் நமீதா பிம்பம் ஹடயோகம் கற்பிக்கும் டீச்சர் பாத்திரத்தை ஏற்றுள்ளது. தமிழ் சினிமாவும் இதற்குக் குறைந்ததில்லை என்ற விதத்தில் மசாஜ் பண்ணுவது எண்ணெய் குளியல் என்று காட்சிகள்.


இது தவிர ஆண் சுத்த கனவான், பெண் மோகினி, பைசாசம், மயக்குபவள், இன்பம் துய்ப்பவள் என்ற தமிழ் சினிமாவின் விசுவாமித்திரர்-மேனகா archetype கதைகளிலும் சம்பவங்களிலும் நமீதா பெண் பிம்பம் மேனகாவாக இருக்கிறது.


கள்ளத்துய்ப்பு சம்பவங்கள் என்பவை எனக்கு எதுவும் தெரியாதே என்ற பாவனையில் இருக்க நனவற்று உடல்களையும் உணர்வுகளையும் பாலின்பம் துய்க்க விடுவனவாகும். மக்கள் நெரிசல் மிகுந்த  பஸ்கள், ரயில்கள், கோவில்கள், தெருக்கள், திருவிழாக்கள் என இன்றைக்கு உடல்கள் தெரியாதே என சதை இன்பம் துய்க்கின்றன என்றால் அவைகளுக்கான நிகர் அனுபவமே நமீதா என்ற பெண் பிம்பத்தினை திரையில் பார்ப்பதாகவும் இருக்கிறது.

சதைக்கோளம் என்ற நிலைமை மாறி நமீதா என்ற பெண் பிம்பத்தின் நடிப்பினை திரையில் பார்க்க ஆர்வமாய் இருக்கிறேன்.

2 comments:

ராம்ஜி_யாஹூ said...

கட்டுரை அருமை
ஆனால் நான் சற்று முரண் படுகிறேன்

ஆண்களின் வயதிற்கு ஏற்ப ஒல்லி பெண் பிம்பங்களை ரசித்தல், சதைப் பற்று உள்ள பிம்பங்களை ரசித்தல் என ரசனை மாறுபடுகிறது என்பது என் பார்வை.

ஒரு ஆண் எட்டாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு படிக்கும் வரை, அழகான முகம் உடைய பெண்களை மட்டுமே ரசிப்பார்.

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் வயது முதல் இருபத்தி இரண்டு வயது வரை உள்ள ஆண்மகன் ஒல்லியான பிம்பங்களை ரசிப்பான் (த்ரிஷா, இலியானா, அமலா பால், லக்ஸ்மி ராய் ) .

இருபத்தி ஐந்து வயது முதல் நாற்பது வயது வரை உள்ள ஆண்மகனே , முகம் தாண்டி பால் உறுப்புக்களை சார்ந்து ரசிக்க முயல்வான் (நமீதா, தீபா , ஜோதி லக்ஸ்மி, பாபிலோனா என்று)

Anonymous said...

குண்டு பெண் பிம்பங்களின் வம்சாவழியில் முக்கியமான விடுபடல் குஷ்பூ- சுந்தர்