Wednesday, November 2, 2011

குரங்குச் சண்டை

மகாராஷ்டிர பைத்தானி சித்ரகதி ஓவியம்- Replica by Balaji Srinivasan


வால் சுழற்றி 
எதிர் குரங்கின் 
பிடறி மயிர் 
கட்டியிழுத்து
தோள் தட்டி
தொடை தட்டி
சிலிர்த்து நின்றால் 
அது யுத்தம்

பற் கடித்து
கண் சிவந்து
நகம் தீட்டி
நா துருத்தி
பூமி அதிர 
சமட்டி நின்றால்
அது யுத்தம்

உன் ஆயுதம்
என் ஆயுதம்
உன் உயிர் நிலை
என் உயிர் நிலை
சொல்லி இறங்கினால்
அது யுத்தம்

வானர ராஜன்கள் அஞ்சுவதில்லை
ஒளிந்தெறியும் அம்புகளை

4 comments:

றியாஸ் குரானா said...

குரங்கோடு பேச சில நிமிடங்கள் கிடைத்தன
கேட்பதற்கான நிமிடங்களாக அதை மாற்றி
வாய்குவந்தபடி வளவளவென அது பேசிக்கொண்டேயிருந்தது.
குரங்கு குரங்குக் கதை பேசுமா
ஆம் ஆப்பிளுத்த கதைசொன்னது..
திடீரென அருகிலிருந்த மரத்தில் துள்ளி பயமுறுத்தியது
கிளைகளையுடைத்து வீசியபடி பேயாட்டமாடியது..
ஈ என இழித்து..ஒரு உறுமல் உறுமி பல்லிளித்தது.
பேக்காட்டியது...
தன்னைச் சுற்றியுள்ள மரங்களில் மட்டுமல்ல
முள்ளுப் பத்தைகளிலும் பாய்ந்தாலும்...
என்ன மாயமோ மந்திரமோ எனக்கொன்றும் ஆகுறதில்ல
என்ற மாதிரி விளையாட்டுக்காட்டியது
நம்முட மகாமேதை சொன்னதுபோல் பலமுறை பயிற்ச்சி செய்தும்
என்னால் அதை ரசிக்க முடியவில்லை.
அவராச்சும் இதை ரசிச்சுக்காட்டுவாரோ என்னவோ..

Aranga said...

அண்ணன்,

http://www.jeyamohan.in/?p=281 அறிவுஜீவிக்குரங்கும் ஆப்பும் , இலக்கிய கோட்பாடுகள் http://www.jeyamohan.in/?p=7714 இரண்டுமே 2008 வாக்கில் எழுதப்பட்டவை ,

பொருத்தப்பாடு :) கருதி தளநடத்துனர்களால் மறுபிரசுரம் செய்யப்பட்டன .

Anonymous said...

JeMo wants to be the only game in town, threats will be put down at any cost. This is the month of his undoing.

Morale of the story is "Don't wrestle with a pig, you get dirty and the pig enjoys it:)"

Anonymous said...

மழை ஓய்ந்தாலும் தூவானம் விடாது போல் இருக்கிறதே. நாளை நாகர்கோவிலில் மாபெரும் மல்யுத்தம் அப்படின்னு நியூஸ் வராம இருந்தா சரி.