Monday, September 13, 2010

கூண்டில் ஏறுதல்

பெயர் சொல்லி உங்களை எந்த நேரமும் அழைக்கக்கூடும்
அழைக்காமலும் இருக்கக்கூடும்
அழைத்தபின் உங்களை கூண்டில் ஏற்றவும்கூடும்
ஏற்றாமலிருக்கவும்கூடும்
கூண்டில் ஏற்றியபின்
உங்கள் வசதியைக் கேட்காமல்
வாய்தா தேதி அறிவிக்கவும்கூடும்
தேதி அறிவிக்காமல் குற்றப்பத்திரிக்கை தரவும்கூடும்
குற்றப்பத்திரிக்கை தராமல் வருடங்களை இழுத்தடிக்கவும்கூடும்
விசாரணை நடந்தாலும் நடக்கும்
நடக்காமலும் போகலாம்

எது எப்படி ஆயினும்
நீதிபதி உங்கள் கண்களை சந்திக்க மாட்டார்

நீங்கள் ஜன நெரிசலில் சிக்கியபடி
காத்திருக்க வேண்டும்
தயார்நிலையில்

1 comment:

Unknown said...

அற்புதமான கவிதை !! இதை அனுபவித்திருக்கிறேன் எதிரியாக,சாட்சியாக,வழக்காடுபவனாக மற்றும் வழக்குரைஞனாக ....